தமிழ் செய்திகள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் உலக காபி தினத்தையொட்டி, சிறப்பு லிமிடெட் எடிஷன் ‘சிங்கிள்-ஒரிஜின் யெஸ்டி காபியை அறிமுகப்படுத்தியது.

சென்னை: ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ், தனது ரசிகர்களுடன் உள்ள பாசத்தையும் உற்சாகத்தையும் புதிய விதத்தில் கொண்டாடும் விதமாக, காபியின் மனம் கவரும் மையமாகவும் இயற்கையின் அழகும் நிறைந்த கூர்க் பகுதியில் ஒரு சிறப்பு ஹோம் கமிங் ரைடு நடத்தி மகிழ்ந்தது. இந்த நிகழ்வில், நிறுவனம் தனது புகழ்பெற்ற ஜாவா யெஸ்டி நோமாட்ஸ் ரைடிங் திட்டத்தை மீண்டும் தொடங்கியது. அதோடு, லெவிஸ்டா காபியுடன் இணைந்து, அவர்களின் SLN காபி எஸ்டேட்டில், தனிச்சிறப்பான சிங்கிள்-ஒரிஜின் குர்மெட் ‘யெஸ்டி காபி’-யையும் அறிமுகப்படுத்தியது.

2018-இல், நிறுவனம், மோட்டார் சைக்கிள் ஜாவா மற்றும் யெஸ்டி என்ற புகழ்பெற்ற பிராண்டுகளை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவை மிட்-சைஸ் செக்மெண்ட் மோட்டார் சைக்கிள் பிரிவில், பெர்ஃபார்மன்ஸ் கிளாசிக் மோட்டார் சைக்கிள்கள் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டன. வழக்கமான பாதையைத் தவிர்த்து, ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்தது. அதாவது, ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் சிந்தனைகளைக் கொண்ட ரைடர்களை ஒன்றுசேர்த்து, சமூகங்களையும் சிறிய துணைக் கலாச்சாரங்களையும் உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது. இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணம் என்ன? பயணிகளின் உண்மையான அனுபவங்களே, பிராண்டு விசுவாசத்திற்கு அடித்தளம் அமைத்தது.

2025 ஜாவா யெஸ்டி நோமாட்ஸ் ப்ரூஸ்கேப், ‘ரூட்ஸ் டூ ரூட்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒரு ஆழமான மற்றும் முழுமையான ரைடிங் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது. இதில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட யெஸ்டி ரோட்ஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் பயணம் புகழ்பெற்ற ஐடியல் ஜாவா பிறந்த இடமான மைசூரில் தொடங்கியது. அங்கிருந்து பயணம் தொடர்ந்து, இந்தியாவின் மிகச் சிறந்த, இயல்பான காபி வகைகள் வளரும் மடிகேரி, கூர்க் என்ற காபி வளரும் பிரதேசத்தில் நிறைவடைந்தது. இந்த ரைடு, நாடு முழுவதிலிருந்தும் வந்த ஊடக பிரதிநிதிகள், காபி மற்றும் பைக் ஆர்வலர்கள், மோட்டார் சைக்கிள் நிபுணர்கள் ஆகியோருக்கு நேரடியாக 2025 யெஸ்டி ரோட்ஸ்டர் அனுபவத்தை வழங்கியது. அதே நேரத்தில், இந்த நிகழ்ச்சி வரலாறு, சமூக இணைப்பு, மற்றும் காபி சார்ந்த கலாச்சாரம் ஆகியவற்றுக்கிடையேயான ஆழமான தொடர்பையும் வெளிப்படுத்தியது.

“மோட்டார் சைக்கிள் உலகில், ஒரு புகழ்பெற்ற பிராண்டை உருவாக்குவது என்பது, வெறும் சிறந்த வண்டிகளைத் தயாரிப்பதை விட மிகவும் பெரிய விஷயம். நாங்கள் 2018 இல் இந்த வேலையைத் தொடங்கியபோது, மற்றவர்கள் உருவாக்க முடியாத, உண்மையான கதைகளைக் கொண்ட, காலத்தால் அழியாத கிளாசிக் வண்டிகளைப் பெற்றோம். பழைய நினைவுகள் எங்களுக்கு ஒரு வழியைத் திறந்தாலும், எங்கள் வாடிக்கையாளர்களின் சவாரி அனுபவங்களின் மூலமாகத்தான், அந்த பிராண்டின் மீதான உண்மையான அன்பு வளர்ந்தது. லடாக்கில் நடக்கும் ‘நோமாட்ஸ் ரைட்’ முதல் கோவளத்தில் நடக்கும் சர்ஃபிங் நிகழ்வுகள் வரை, ராணுவப் படைகளுடனான கூட்டுறவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் மனதைத் தொடும் கதைகள் போன்ற உண்மையான அனுபவங்களை உருவாக்கியதுதான் எங்கள் பயணத்தை வளர்ந்துள்ளது” என்று கிளாசிக் லெஜண்ட்ஸ் இணை நிறுவனர் அனுபம் தரேஜா தெரிவித்தார். “2025 நோமாட்ஸ் மற்றும் யெஸ்டி காபி அறிமுகப்படுத்தல் எங்கள் புதுமையான பாதையை வெளிப்படுத்துகிறது. லெவிஸ்டாவின் நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட யெஸ்டி காபி, மோட்டார் சைக்கிள் பயண அனுபவங்களையும் காபியின் சுவையையும் இணைத்து, ஆராய்ச்சி மனப்பான்மையையும் சுகமான தருணங்களையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வைக்கிறது.”

ஸ்பெஷல் எடிஷனாக வெளிவந்துள்ள ‘யெஸ்டி x லெவிஸ்டா’ காபி பேக்கில், கூர்க் பகுதியின் சிறந்த காபி சுவையைப் பிடிக்கும் வகையில், இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை காபி 100 சதவிகிதம் அராபிகா வகை. மைசூர் நக்கெட்ஸ் எக்ஸ்ட்ரா போல்ட் என்ற மிக உயர்தர AAA காபி கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் கூர்க் பகுதியில் விளையும் இந்த ‘சந்திரகிரி’ வகை அராபிகா, மிதமான அளவில் வறுக்கப்படுகிறது. இதில் மென்மையான சாக்லேட், வறுத்த பருப்புகள் மற்றும் கேரமல் ஆகியவற்றுடன், லேசாக எலுமிச்சை மற்றும் மணமூட்டும் மசாலா சுவைகளும் இருக்கும். இரண்டாவது வகை காபி உயர்தர ரோபஸ்டா மற்றும் அராபிகா காபி கொட்டைகளின் சரியான கலவை. இதுவும் மிதமாக வறுக்கப்பட்டு, கரையும் காபியாக கிடைக்கிறது. இதன் சிறப்பு யாதெனில் நிறைவான நறுமணம் மற்றும் சுவையுடன், மிகவும் மென்மையான தன்மையையும், ஆழமான காபி அனுபவத்தையும் இது வழங்குகிறது. மொத்தத்தில், இந்த ‘யெஸ்டி x லெவிஸ்டா’ காபி, மோட்டார் சைக்கிள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கும், அதேபோல் ஆத்மார்த்தமான மற்றும் மகிழ்ச்சியான காபி அனுபவத்தை விரும்புபவர்களுக்கும் ஒரு இணையற்ற அனுபவத்தை அளிக்கிறது.

இந்தச் ஸ்பெஷல் எடிஷனான லெவிஸ்டா x யெஸ்டி காபி பேக்கை, அறிமுகச்சலுகை விலையாக ரூ.1,999/- கொடுத்து, www.jawayezdimotorcycles.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நோமாட்ஸ் ரைடிங் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விரிவடைந்துள்ளது. முதலில் ஐபெக்ஸ் டிரெயில் (லடாக், 2019) பயணத்துடன் தொடங்கி, வடகிழக்கு இந்தியாவில் நடந்த டாக்ட்ஸாங் டிரெயில் மற்றும் நம் நாட்டின் முக்கிய கலாச்சாரத்தைக் காட்டும் பஞ்சாப் டா டோர் போன்ற சிறப்புப் பயணங்கள் நடந்தன. அதோடு, அடிக்கடி டிரெயில் அட்டாக் என்ற ஆஃப்-ரோடு பயிற்சி நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்தப் பயணங்கள், சாகசம், நண்பர்களுக்கிடையேயான பாசம், உள்ளூர் மக்களுடன் பழகுவது ஆகியவற்றின் சிறப்பை உணர்த்துவதோடு, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது ஒரு வாழ்க்கை முறை என்பதையும் கொண்டாடுகிறது.

இந்த நிறுவனம், ராக் மற்றும் ஜாஸ் இசை விழாக்கள், தெரு ஓவியக் கலை மற்றும் சர்ஃபிங் போன்ற பல நிகழ்வுகளுடன் மிகவும் ஆர்வத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துணை-கலாச்சாரங்களுக்குள் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டது. இந்தக் கூட்டணிகள், சவாரி செய்பவர்களுக்கு இடையேயான நட்பைக் கொண்டாடும் அதேவேளையில், இந்தக் கம்பெனியின் சாகச மற்றும் மரபுகளைப் பின்பற்றாத கொள்கைகளையும் நிலைநாட்டின. மேலும், லடாக்கில் இந்த சமூகங்கள் செய்யும் சமூகப் பணிகள் மற்றும் ராணுவத்துடனான கூட்டுறவுகள், அதன் தைரியம் மற்றும் சாகச உணர்வு மீதான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுதலை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றும் லட்சியத்துடன், ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், தன் சவாரி செய்பவர்களுக்குப் பயனுள்ள மற்றும் ஆழமான அனுபவங்களை வழங்க, இதுபோன்ற இன்னும் பல கூட்டணிகளை உருவாக்கத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *