General

கே.சி.ஜி கல்லூரியின் 21 ஆவது பட்டமளிப்பு விழா

சென்னை ராஜீவ்காந்தி சாலை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் 21 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை அண்ணா பல்கலை.யின் துணை வேந்தர் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மொத்தமாக 958 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தரவரிசையில் பாடவாரியாக முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுடன், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் பேசுகையில்,

எனது வாழ்நாள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று பேசினார்.

இந்தியாவில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். உலக நாடுகள் பல இந்திய மாணவர்களை விரும்புகின்றன.

செல்போன் பயன்பாட்டை குறைப்பது, போதை பொருட்களை தவிர்ப்பது, நல்ல நண்பர்களை வைத்திருப்பது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், அம்மன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீ ஆனந்த் சுந்தரேசன், ஹிந்துஸ்தான் கல்வி குழுமத்தின் தலைவர் ஜேக்கப் வர்கீஸ், கே.சி.ஜி. கல்லூரியின் இயக்குனர் அன்னி ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *