தமிழ் செய்திகள்

பெப்ஸ் மெத்தை நிறுவனத்தின் புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’; அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைப்பு

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்பிரிங் மெத்தை தயாரிப்பு நிறுவனமான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குன்றத்தூரில் தனது புதிய ‘பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ விற்பனை மையத்தை திறந்திருக்கிறது. இதன் மூலம் சென்னையில் தனது சில்லறை வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த புதிய விற்பனை மையத்தை பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை பிரிவு பொதுமேலாளர் ராஜேஷ் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், சென்னையில் பெப்ஸ் நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியை பாராட்டியதோடு, புதிய விற்பனையகத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நவீன வசதிகளுடன் ஒரு அனுபவ மையம் என்ற வடிவமைப்புடன் குன்றத்தூரில் நிறுவப்பட்டுள்ள ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’, பெப்ஸ் நிறுவனத்தின் அனைத்து வகையான மெத்தைகள் (ஸ்பிரிங், ஃபோம் மற்றும் கயிறு), தலையணைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் உதிரிபாகங்களை ஒரே இடத்தில் பார்வையிட வாடிக்கையாளர்களுக்கு, சிறந்த தளத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள், பெப்ஸ்-ன் தயாரிப்புகளான மெத்தைகள் மற்றும் தலையணைகளின் தன்மைகளை நேரடியாக உணர்ந்து, ஒப்பிட்டுப் பார்த்து, தங்கள் உடல்நலம் மற்றும் தூக்கத் தேவைகளுக்கேற்ப சரியான தயாரிப்பை தேர்ந்தெடுக்க இங்கு வழிகாட்டப்படுகிறது.

இந்நிறுவனத்தின் சார்பில் இந்த ஆண்டு நான்கு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பெப்ஸ் கம்ஃபோர்ட் (Comfort), பெப்ஸ் சுப்ரீம் (Supreme), பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம் (Restonic Memory Foam) மற்றும் பெப்ஸ் சுப்பீரியர் ஸ்பிரிங் ரேஞ்ச் (Superior Spring Range) ஆகியவை, சிறந்த உடல் ஆதரவு, சொகுசான உறக்கம் மற்றும் நீண்ட கால உழைப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் ராஜேஷ் கூறியதாவது: “சென்னை எப்போதும் எங்களுக்கு மிக முக்கியமான மற்றும் நம்பிக்கையான சந்தையாகத் திகழ்கிறது. இங்குத் தரமான மற்றும் பிரீமியம் தூக்கத் தீர்வுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனாலேயே இம்மாநகரில் எங்கள் இருப்பையும், செயற்பரப்பின் வீச்செல்லையையும் நாங்கள் மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். குன்றத்தூரில் அமைந்துள்ள இந்த புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்கும். ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள உறுப்பினர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை உறுதி செய்யும் வகையில், புதுமையான மற்றும் நம்பகமான தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *