ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: மாஸ்டர் டிசைன் மற்றும் பவர்ஃபுல் பெர்ஃபார்மென்ஸுடன், 200MP லூமாகலர் போர்ட்ரெய்ட் மாஸ்டர் கேமரா வசதி
- ரியல்மி 16 ப்ரோ+ மாடல் 3.5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட 200MP லூமாகலர் போர்ட்ரெய்ட் கேமரா, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட், 7000mAh டைட்டன் பேட்டரி மற்றும் நவோடோ புகாசாவாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அர்பன் வைல்டு டிசைன் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது; இது 8GB+128GB, 8GB+256GB மற்றும் 12GB+256GB ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது, இதன் விலை ₹35,999* முதல் தொடங்குகிறது
- ரியல்மி 16 ப்ரோ மாடல் 200MP லூமாகலர் போர்ட்ரெய்ட் கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 7300-மேக்ஸ் 5G சிப்செட், 7000mAh டைட்டன் பேட்டரி மற்றும் ப்ரீமியம் அர்பன் வைல்டு டிசைன் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது; இது 8GB+128GB, 8GB+256GB மற்றும் 12GB+256GB ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது, இதன் விலை ₹28,999* முதல் தொடங்குகிறது
- ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடல் 55dB ரியல்–டைம் ANC, AI இயர் கெனால் அடாப்டிவ் ANC, டூயல்–டிரைவர் அகவுஸ்டிக்ஸ் மற்றும் கூகுள் ஜெமினி மூலம் இயங்கும் AI வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது; இதன் விலை ₹3,799 ஆகும், மேலும் ₹3,599* என்ற சிறப்பு அறிமுக விலையிலும் இது கிடைக்கிறது
- ரியல்மி பேட் 3 மாடல் 2.8K புக்–வியூ டிஸ்ப்ளே, AI மூலம் இயங்கும் ப்ரொடக்டிவிட்டி டூல்ஸ் மற்றும் 6.6mm மிக மெல்லிய டிசைனில் 12,200mAh ஸ்லிம் டைட்டன் பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது; இது வை–ஃபை மற்றும் 5G வேரியன்ட்களில் கிடைக்கிறது, இதன் விலை ₹24,999* முதல் தொடங்குகிறது


சென்னை – இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான realme, இன்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸை, அறிமுகப்படுத்தியுள்ளது; இதன் மூலம் பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவில் தனது இடத்தை அந்த நிறுவனம் ஒரு மைல்கல்லாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் ஃபிளாக்ஷிப் தரத்திலான ரியல்மி 16 ப்ரோ+ மற்றும் அனைவரும் எளிதாக வாங்கக்கூடிய வகையில் அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட ஆல்-ரவுண்டர் ரியல்மி 16 ப்ரோ ஆகிய மாடல்கள் முன்னணியில் உள்ளன; இவை மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் கலைநயம் மிக்க டிசைனுடன், போர்ட்ரெய்ட் போட்டோகிராபி தரத்தையே அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.
200MP போர்ட்ரெய்ட் மாஸ்டர்: ஒவ்வொரு அழகான உணர்வையும் அதன் தனித்தன்மை மாறாமல் படம் பிடியுங்கள்
ரியல்மி 16 ப்ரோ Series, பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவில் ஒரு 200MP போர்ட்ரெய்ட் மாஸ்டராகத் தனது முத்திரையைப் பதித்துள்ளது; இது ஃபிளாக்ஷிப் லெவல் இமேஜிங் ஹார்டுவேர் மற்றும் இன்டெலிஜென்ட் சாஃப்ட்வேரை ஒன்றிணைத்து, போர்ட்ரெய்ட் போட்டோகிராபிக்கு ஒரு புதிய இலக்கணத்தைத் தருகிறது. ஒவ்வொரு மனநிலை மற்றும் தருணத்தையும் அதன் முழு உயிர்ப்புடன் படம் பிடிக்கத் தேவையான புரொஃபஷனல் டூல்ஸை இந்த இரண்டு மாடல்களுமே வழங்குகின்றன; இதில் ஃபிளாக்ஷிப் தரத்திலான ரியல்மி 16 ப்ரோ+, உங்களின் தனித்துவமான கற்பனைத் திறனுக்கு உயிர் கொடுக்கும் வகையிலான பிரத்யேக அப்கிரேடுகளுடன் முன்னணியில் உள்ளது.
ரியல்மி 16 ப்ரோ+ மாடல், இந்தப் பிரிவிலேயே முதன்முறையாக 200MP லூமாகலர் கேமரா மற்றும் 3.5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் ஆகிய வசதிகளுடன் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது; இது பயனர்கள் “ஒவ்வொரு ஜூமிலும் தங்களின் தனித்துவமான உணர்வுகளை மிக நேர்த்தியாகப் படம் பிடிக்க” உறுதுணையாக இருக்கிறது. TÜV ரெய்ன்லேண்ட் சான்றிதழ் பெற்ற இந்த கேமரா, இயற்கையான சரும நிறம், மனதைக் கவரும் ஆழம் மற்றும் தத்ரூபமான ஒளி அமைப்பு என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு சிறப்பான போர்ட்ரெய்ட் கலைப்படைப்பையே உருவாக்குகிறது. இதனுடன் இணைந்த ஃபுல்ஃபோக்கல் போர்ட்ரெய்ட் லென்ஸ் கிட் (1×/1.5×/2×/3.5×/4×) மற்றும் ப்ரோடெப்த் பொக்கே அல்காரிதம் ஆகியவை, மிக மெல்லிய தலைமுடி இழை வரையிலான பிளர் எஃபெக்ட்ஸையும், உயிரோட்டமான முப்பரிமாண ஆழத்துடன் கூடிய தெளிவான நுணுக்கங்களையும் எந்தத் தூரத்தில் இருந்து படம் பிடித்தாலும் மிக அழகாக வழங்குகின்றன. பார்ட்டிகளில் மின்னும் ஒளி மற்றும் துள்ளலான கூட்டங்களுக்கு இடையே அனைவரையும் ஒன்றிணைத்து அட்டகாசமான குரூப் போட்டோக்களையும், தனித்துவமான சோலோ போர்ட்ரெய்டுகளையும் மிக எளிதாகப் படம் பிடிப்பதற்காகவே ரியல்மி 16 ப்ரோ+பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ரியல்மி 16 ப்ரோ+ மாடலானது 7× க்ளோஸ்-அப்ஸ், 10× ஸ்டேஜ் கேப்சர்ஸ் மற்றும் 120× வரையிலான சூப்பர் ஜூம் வசதியைக் கொண்டுள்ளது; அத்துடன் 4K ஃபுல்ஃபோக்கல் HDR வீடியோ (1×/2×/3.5×/7×) மற்றும் மெயின்ட்ராக் அல்காரிதம் ஆகியவற்றின் துணையோடு, நகரும் மனிதர்களையோ அல்லது பொருட்களையோ மிகத் துல்லியமாகக் குறிவைத்து, ஒரு புரொஃபஷனல் தரத்திலான மிகவும் சீரான வீடியோ காட்சிகளை வழங்குகிறது.
அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ரியல்மி 16 ப்ரோ மாடலும், ரியல்மி 16 ப்ரோ+. இல் உள்ளது போன்ற அதே 200MP லூமாகலர் கேமரா மற்றும் கோல்டன் போர்ட்ரெய்ட் லென்ஸ் கிட் (1×/1.5×/2×/3.5×/4×) வசதியைக் கொண்டுள்ளது. இதுவும் மிக மெல்லிய தலைமுடி இழை வரையிலான பிளர் எஃபெக்ட்ஸ், உயிரோட்டமான முப்பரிமாண ஆழத்துடன் கூடிய தெளிவான போர்ட்ரெய்டுகளை வழங்குகிறது; இதில் உள்ள ஃப்ரீ ஃபோக்கல் லெந்த் ஸ்விட்சிங் வசதி மூலம், பயனர்கள் எந்த ஜூம் லெவலிலும் மிகவும் நேர்த்தியான மற்றும் இயற்கையான தோற்றம் கொண்ட போர்ட்ரெய்டுகளை மிக எளிதாகப் படம் பிடிக்க முடியும்.
போட்டோகிராபி கலையை இன்னும் ஸ்டைலாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்றித் தரும் வகையில், இந்த இரண்டு மாடல்களுமே மிகச் சிறந்த சாஃப்ட்வேர் அம்சங்களை அள்ளித் தருகின்றன. இந்தத் துறையிலேயே முதன்முறையாக அறிமுகமாகியுள்ள வைப் மாஸ்டர் மோட் மூலம், ஐந்து சிக்னேச்சர் போர்ட்ரெய்ட் ஸ்டைல்கள் உட்பட (லைவ்லி, வின்டேஜ், ஃப்ரெஷ், நியான் மற்றும் விவிட் போன்றவை) 21 விதமான பிரத்யேக டோன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் ஏஐ எடிட் ஜீனி அம்சமும் இன்னும் கூடுதல் பலம் பெற்று வந்துள்ளது. உங்கள் குரல் வழியாகவோ அல்லது ஒரு சிறு மெசேஜ் மூலமாகவோ கட்டளைகளைக் கொடுத்து எடிட்டிங் வேலைகளை மிக எளிதாக இதில் முடித்துவிடலாம்; முகத்தின் பொலிவு மாறாமல் ஒரு நொடியில் பேக்கிரவுண்டையோ அல்லது ஸ்டைலையோ மாற்றி அமைப்பதற்கும், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் வீடியோக்களைப் போல சுலபமாக எடிட் செய்வதற்கும் இது மிகவும் துணையாக இருக்கும். மேலும் ஏஐ லைட்மீ மற்றும் ஏஐ ஸ்டைல்மீ வசதிகள் மூலம், ஒரு ஸ்டுடியோவில் படம் பிடித்தது போன்ற நேர்த்தியான லைட்டிங் மற்றும் வித்தியாசமான ஃபில்டர்களை நேரடியாகக் கேமரா திரையிலேயே உங்களால் கொண்டு வர முடியும். இத்தகைய புதிய தொழில்நுட்பங்களால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவும் உங்கள் தனித்துவமான ஸ்டைலை உலகிற்கு வெளிப்படுத்துவதோடு, பார்த்தவுடனேயே மற்றவர்களுடன் பகிரத் தோன்றும் வகையில் மிக அழகாக அமையும்.
நாடோ புகசாவாவின் அர்பன் வைல்ட் டிசைன்: இயற்கையின் ஆன்மாவும் நகரத்தின் நவீனமும் கைகோர்க்கும் ஒரு கலைப்படைப்பு
திரு. நாடோ புகசாவாவின் புகழ்பெற்ற ‘வித்தவுட் தாட்’ எனும் வடிவமைப்புத் தத்துவமும், ரியல்மியின் பிரத்யேகமான ‘ரியல் டிசைன்’ தத்துவமும் கைகோர்க்கும்போது, அது வெறும் அழகை மட்டும் தராமல் வடிவமைப்பின் ஆழமான அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த அபூர்வமான கூட்டணியே ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் இன் உயிர்நாடியாக விளங்குவதோடு, ‘உண்மையான கண்டுபிடிப்பு’ எனும் இந்த பிராண்டின் அடிப்படை அடையாளத்தையும் பறைசாற்றுகிறது.
இந்தச் சிறப்பான ஒருங்கிணைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் அர்பன் வைல்ட் டிசைன்‘ எனும் புதிய தத்துவத்தை அறிமுகப்படுத்துகிறது. இயற்கையில் நாம் காணும் கோதுமை கதிர்கள் மற்றும் கூழாங்கற்களின் தொடு உணர்வால் ஈர்க்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது; இதன் ஒவ்வொரு நுணுக்கமும் பார்த்தவுடனேயே அதைத் தொட்டுப் பார்க்கத் தூண்டும் ஒரு உள்ளார்ந்த விருப்பத்தை நமக்குள்ளே ஏற்படுத்துகிறது. காட்டின் முரட்டுத்தனமான எழிலையும், நகரத்தின் நளினமான அழகையும் ஒருசேரக் கண்முன்னே நிறுத்துகிறது இந்த வடிவமைப்பு.
ரியல்மி 16 ப்ரோ+ மாடல், இந்த ஸ்மார்ட்போன் துறையிலேயே முதன்முறையாகப் பயோ–பேஸ்டு ஆர்கானிக் சிலிக்கான் பேக் கவரை அறிமுகப்படுத்துகிறது; USDA சான்றிதழ் பெற்ற இந்தச் சுற்றுச்சூழலுக்கு உகந்த மெட்டீரியல், தொடுவதற்கு மிகவும் மென்மையாகவும் அதே சமயம் உறுதியாகவும் இருக்கும். இதில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ள கோதுமை கதிர் போன்ற அமைப்பு, ஒரு கோதுமை வயலில் நம் விரல் நுனிகளால் வருடிச் செல்வது போன்ற ஓர் அபூர்வமான உணர்வைத் தருகிறது. அத்துடன், இதன் ஆல்–நேச்சர் கர்வ் டிசைன், போனின் பின்புறம் முதல் டிஸ்ப்ளே வரை கைகளில் மிகவும் வசதியாகவும் பிடிப்பதற்கு சௌகரியமாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் நிறங்களும் பார்ப்பதற்கு தனித்துவமாக உள்ளன. ரியல்மி 16 ப்ரோ+ மாடல், இரண்டு மாஸ்டர் க்யூரேட்டட் நிறங்களில் கிடைக்கிறது: சூரிய ஒளியில் மின்னும் கோதுமை வயல்களின் அழகைப் பிரதிபலிக்கும் ‘மாஸ்டர் கோல்டு‘ மற்றும் நீரோடையில் காணப்படும் மென்மையான கூழாங்கற்களின் நிறத்தை நினைவூட்டும் ‘மாஸ்டர் கிரே‘. இது தவிர, மொட்டுவிட்டு மலரும் கெமிலியா பூக்களின் மென்மையான அழகால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘கெமிலியா பிங்க்‘ எனும் புத்தம் புதிய நிறத்திலும் இது கிடைக்கிறது; இந்தச் சிறப்பான நிறம் இந்தியாவிற்காக மட்டுமே பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனின் கேமரா டிசைனிலும் ஒவ்வொரு சிறு நுணுக்கமும் மிகக் கவனமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மெட்டல் மிரர் கேமரா டெக்கோ எனப்படும் இதன் கேமரா பகுதி, விலையுயர்ந்த பிவிடி ட்ரீட்மென்ட் மற்றும் நானோ ஸ்கேல் கோட்டிங் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ஒரு நகையைப் போல ஜொலிப்பதோடு கீறல்கள் மற்றும் துருப்பிடிப்பதையும் தடுக்கிறது. அதே சமயம், வோல்கானிக் கேமரா டெக்கோ டிசைன், லென்ஸை போனின் பாடியோடு மிக அழகாக ஒருங்கிணைத்து, கைகளில் பிடிப்பதற்கு மிகவும் மென்மையாகவும் வசதியாகவும் இருக்கும்படி செய்கிறது. இத்தனை சிறப்பம்சங்களும் வெறும் 8.49mm தடிமன் கொண்ட மிக மெல்லிய டிசைனிற்குள்ளேயே கொண்டு வரப்பட்டுள்ளது; இது பார்ப்பதற்கு அழகாகவும், அதே சமயம் நீண்ட காலம் உழைக்கக்கூடிய உறுதியோடும் திகழ்கிறது.
அனைவருக்கும் மிகச் சிறந்த மதிப்பினை வழங்கும் வகையில், ரியல்மி 16 ப்ரோ மாடலும் அதே டிசைன் தத்துவத்தைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேகக் கூட்டணியின் அடையாளமான மாஸ்டர் கோல்டு நிறத்தில் கிடைக்கும் இது, சருமத்திற்கு மிகவும் இதமான ஒரு தொடு உணர்வைத் தருகிறது. இது தவிர, ஆற்று கூழாங்கற்களின் மென்மையான அமைப்பால் ஈர்க்கப்பட்ட பெப்பிள் கிரே மற்றும் அமைதியையும் நளினத்தையும் பறைசாற்றும் ஆர்ச்சிட் பர்பிள் ஆகிய நிறங்களிலும் இது கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் துறையிலேயே முன்னணியில் உள்ள இதன் வெல்வெட் மேட் ஃபினிஷ், போனின் நிறம் மங்காமல் பாதுகாப்பதோடு, தொடுவதற்கு மிகவும் மென்மையான ஒரு உணர்வைத் தருகிறது; மேலும் இதன் ஸ்லிம் மற்றும் லைட்வெயிட் பாடி கைகளுக்கு ஒரு அலாதியான சௌகரியத்தை அளிக்கிறது. இத்தகைய ஒருங்கிணைந்த டிசைன் முறையினால், ரியல்மி 16 ப்ரோ மாடலானது ரியல்மி 16 ப்ரோ+ மாடலுக்கு நிகரான ஒரு பிரீமியம் லுக்கைப் பெற்றுள்ளது; இதன் மூலம் ஒரு மாஸ்டர்-லெவல் டிசைனை அதிகமான பயனர்கள் எளிதாகப் பெற முடியும்.
டிசைனைத் தாண்டி, ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் IP69 தரத்திலான புரொஃபஷனல் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் வருகிறது; இது வாட்டர்ப்ரூஃப் மற்றும் டஸ்ட்ப்ரூஃப் பாதுகாப்பில் இந்த ஸ்மார்ட்போன் துறையிலேயே மிக உயர்ந்த தரமாகும். இந்த இரண்டு மாடல்களுமே அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடிக்கப்படும் நீர் மற்றும் 80°C வரையிலான வெப்பம் போன்ற கடினமான சூழல்களையும் தாங்கி நிற்கும் திறன் கொண்டவை; இதில் தண்ணீருக்கு அடியிலும் கூட நீங்கள் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும், ரியல்மி 16 ப்ரோ+ மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், போன் கீழே விழுந்தாலோ அல்லது கீறல்கள் ஏற்பட்டாலோ அதிலிருந்து மிகச் சிறந்த பாதுகாப்பை அளித்து நீண்ட கால உழைப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
லீடிங் பெர்ஃபார்மென்ஸ்: ஒவ்வொரு நகர்வும் மின்னல் வேகத்தில்
ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் சக்திவாய்ந்த ஹார்டுவேர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்த விலைப் பிரிவிலேயே மிகச் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது.
குறிப்பாக ரியல்மி 16 ப்ரோ+ மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட், அன்டுடு சோதனையில் 1.44 மில்லியன் என்ற மலைக்கவைக்கும் ஸ்கோரைப் பெற்றுள்ளது. இதன் மூலம் எந்தத் தடங்கலும் இல்லாமல் 120FPS வேகத்தில் மிக ஸ்மூத்தான கேமிங் அனுபவத்தைப் பெற முடியும். இதனுடன் கைகோர்க்கும் ராக்கெட் LPDDR5X RAM, என்பது 8400Mbps வரையிலான அதிவேக ரீட் மற்றும் ரைட் வசதியை ஆதரிக்கும் ஒரு பிரீமியம் லோ-பவர் DRAM ஆகும். இந்தச் சிறப்பான கூட்டணி காரணமாக, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களைப் பயன்படுத்துவது, ஏஐ முறையில் போட்டோக்களை எடிட் செய்வது மற்றும் கேமிங் விளையாடும்போது போன் சூடாகாமல் சீராக இருப்பது என அனைத்தும் மிக வேகமாகவும் சீராகவும் நடக்கும். மேலும், ரியல்மி 16 ப்ரோ+ இல் உள்ள 6.8 இன்ச் 1.5K 144Hz ஹைப்பர்-க்ளோ 4D கர்வ்+ டிஸ்ப்ளே ஒரு தனிச்சிறப்பு. இதன் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் காரணமாக, உச்சி வெயிலில் கூட ஸ்கிரீனில் உள்ளவை பளிச்சென்று தெரியும். இதில் உள்ள 4608Hz PWM டிம்மிங் வசதி கண்களுக்கு எந்தவித சோர்வும் ஏற்படாமல் பாதுகாப்பதோடு, 1.07 பில்லியன் வண்ணங்களை அள்ளித்தரும் 10-பிட் கலர் டெப்த் தொழில்நுட்பம் ஒவ்வொரு காட்சியையும் மிகத் தத்ரூபமாக உங்கள் கண்முன்னே நிறுத்தும். இத்தகைய நுணுக்கமான திரையமைப்பு, நீண்ட நேரம் வீடியோக்கள் பார்த்தாலும் கண்களுக்கு இதமான உணவைத் தருவதோடு, ஒரு தியேட்டருக்குள் அமர்ந்து படம் பார்ப்பது போன்ற பிரம்மாண்டமான அனுபவத்தை உங்கள் கைகளிலேயே கொண்டு வந்து சேர்க்கும்.
ரியல்மி 16 ப்ரோ மாடலில் மீடியாடெக் டைமென்சிட்டி 7300-மேக்ஸ்5G, சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது; இது அன்டுடு சோதனையில் 9,70,000-க்கும் அதிகமான ஸ்கோரைப் பெற்று அன்றாடப் பயன்பாடுகளை மிக ஸ்மூத்தாக கையாள வழிவகை செய்கிறது. இதனுடன் 6.78 இன்ச் 1.5K ஃபிளாட் 144Hz அமோலெட் டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்றுள்ளது
இந்த இரண்டு மாடல்களுமே நாள் முழுவதும் தாராளமாக உழைக்கக்கூடிய 7000mAh டைட்டன் பேட்டரியைக் கொண்டிருந்தாலும், அவை பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன; அத்துடன் போன் சூடாகாமல் தடுக்க ஏர்ஃப்ளோ VC கூலிங் சிஸ்டமும் இதில் உள்ளது. இந்த அதிரடியான ஹார்டுவேர் வசதிகளுக்குப் பலம் சேர்க்கும் விதமாக, பிளக்ஸ் இன்ஜின்³ தொழில்நுட்பத்துடன் கூடிய ரியல்மி UI 7.0 வழங்கப்பட்டுள்ளது; இது போனின் வேகத்தை 15% வரை அதிகரித்து ஒட்டுமொத்தப் பயன்பாட்டையும் மிக மென்மையாக மாற்றுகிறது. மேலும், இதில் உள்ள நெக்ஸ்ட் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஏஐ ஃப்ரேமிங் மாஸ்டர், ஏஐ ரெக்கார்டிங், ஏஐ டிரான்ஸ்லேஷன், ஏஐ கேமிங் கோச் மற்றும் கூகுள் ஜெமினி லைவ் போன்ற புத்திசாலித்தனமான வசதிகளைப் பயன்படுத்தலாம்; இது உங்களின் படைப்பாற்றலையும் வேலைத்திறனையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
ரியல்மி பட்ஸ் ஏர்8 – அல்டிமேட் ஏஐ சவுண்ட் மாஸ்டர்
ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் உடன் இணைந்து, அன்றாட டிஜிட்டல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இரண்டு அதிரடியான சாதனங்களை ரியல்மி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘ஏஐ சவுண்ட் மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் புதிய ரியல்மி பட்ஸ் ஏர்8, இந்தத் துறையிலேயே மிகச்சிறந்த 55dB ரியல்-டைம் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதில் உள்ள 11+6mm டூயல்-டிரைவர் செட்டப் மற்றும் LHDC 5.0 சான்றிதழ் பெற்ற ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்பம், வயர்லெஸ் முறையில் மிகத் தெளிவான மற்றும் துல்லியமான இசையை நமக்கு வழங்குகிறது. மேலும், இதில் உள்ள ஏஐ இயர் கெனால் அடாப்டிவ் ANC மற்றும் போன்கால்களின் போது சத்தத்தை முற்றிலும் குறைக்கும் 6-மைக் சிஸ்டம் மூலம் நாம் பேசும் குரல் மிகத் தெளிவாகக் கேட்கும். குறிப்பாக, கூகுள் ஜெமினி மூலம் இயங்கும் ‘ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் 2.0’ மற்றும் நேருக்கு நேர் பேசும்போது உதவும் ‘ஃபேஸ்-டு-ஃபேஸ் டிரான்ஸ்லேஷன்’ போன்ற வசதிகள் வியக்க வைக்கின்றன. இந்தியாவிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நேச்சர்-டச் மாஸ்டர் டிசைனில்’ வரும் இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8, புத்திசாலித்தனமான மற்றும் ஒரு பிரீமியம் ஆடியோ அனுபவத்தை நமக்குத் தருகிறது.
ரியல்மி பேட் 3 – ஸ்மார்ட்டான கல்வி, குறைவான சார்ஜிங்
இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக, மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரியல்மி பேட் 3 அறிமுகமாகியுள்ளது; ‘ஸ்மார்ட்டான கல்வி, குறைவான சார்ஜிங்’ என்பதே இதன் தாரக மந்திரம். ஏஐ ரெக்கார்டிங் சம்மரி, சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ-அசிஸ்டட் நோட் ரீஃபைன்மென்ட் எனப் பல ஏஐ புரோடக்டிவிட்டி டூல்கள் இதில் நிறைந்துள்ளன. இவ்வளவு வசதிகள் இருந்தும், வெறும் 6.6mm தடிமனில் மிக மெல்லியதாகவும், எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் டேப்லெட்டில், 12,200mAh திறன் கொண்ட பிரம்மாண்டமான ஸ்லிம் டைட்டன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய கவலை இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இதன் 2.8K புக்-வியூ டிஸ்ப்ளே, சரியாக ஒரு A4 பேப்பரின் அளவில் இருப்பதாலும், கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத லோ ப்ளூ லைட் சான்றிதழ் பெற்றிருப்பதாலும், நீண்ட நேரம் படிக்கவும் இணையத்தைப் பயன்படுத்தவும் மிகவும் வசதியாக இருக்கும். நவீன கால மாணவர்களுக்கு ஒரு சிறந்த துணையாக இந்த ரியல்மி பேட் 3 நிச்சயம் இருக்கும்.
விலை மற்றும் கிடைக்கின்ற நிலவரங்கள்
ரியல்மி 16 ப்ரோ+ மற்றும் ரியல்மி 16 ப்ரோஆகிய மாடல்களை உள்ளடக்கிய இந்த ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் realme.com, பிளிப்கார்ட் மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் ரியல்மி 16 ப்ரோ+ மாடலின் விலை ₹39,999 முதலும், ரியல்மி 16 ப்ரோ மாடலின் விலை ₹31,999 முதலும் தொடங்குகின்றன; இவை பல்வேறு RAM மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் வாடிக்கையாளர்கள் இதற்கான அறிமுகச் சலுகைகளைப் பெறலாம்; இதில் வங்கிச் சலுகைகள், வட்டி இல்லா மாதத் தவணை, பழைய போன்களை மாற்றும்போது கிடைக்கும் எக்ஸ்சேஞ் போனஸ் மற்றும் ஏற்கனவே ரியல்மி போன் பயன்படுத்துபவர்களுக்கான ஸ்பெஷல் ரிவார்ட்ஸ் எனப் பல நன்மைகள் காத்திருக்கின்றன.
.
ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் உடன் இணைந்து, ரியல்மி பட்ஸ் ஏர்8 ஆனது ₹3,799 விலையில் விற்பனைக்கு வருகிறது; இதனை நீங்கள் பிளிப்கார்ட், அமேசான், realme.com மற்றும் அருகிலுள்ள ரீடெயில் ஸ்டோர்களிலும் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம்
அதேபோல, பல்வேறு தேவைகளுக்கேற்பப் பல வேரியன்ட்களில் வரும் ரியல்மி பேட் 3, ₹26,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்கும் வங்கித் தள்ளுபடிகள், வட்டி இல்லா மாதத் தவணை மற்றும் சில குறிப்பிட்ட தளங்களில் வழங்கப்படும் காம்போ சலுகைகளையும் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ரியல்மி பேட் 3, பிளிப்கார்ட், realme.com மற்றும் அருகிலுள்ள ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
கூடுதலாக, ரியல்மி ஸ்மார்ட் பென் ₹2,999 விலையில் விற்பனைக்கு வருகிறது; இதனை ரியல்மி பேட் 3 உடன் இணைந்து பயன்படுத்தும்போது, மிக எளிதாகக் குறிப்புகளை எடுப்பதற்கும் உங்களின் வேலைத்திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும்.
இதன் முழுமையான விலை விவரங்கள் இதோ:
| ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் | ||||||
| புராடக்ட் | வேரியண்ட் | விலை (MOP) | ஆஃப்லைன் சலுகை | பிளிப்கார்ட் சலுகை | இணையதள (OW) சலுகை | நிகர விலை (NEP) |
| ரியல்மி 16 ப்ரோ+ 5G | 8GB + 128GB | ₹ 39,999 | கார்டு இஎம்ஐ மூலம் ₹4,000 வரை தள்ளுபடி (12 மாதங்கள் வரை) அல்லது முழுத் தொகையை செலுத்தினால் ₹2,000 தள்ளுபடி. கிஃப்ட் பேக் + 1 வருட எக்ஸ்டென்டட் வாரண்டி . | ₹4,000 பேங்க் ஆஃபர் (BO) அல்லது ₹6,000 எக்ஸ்சேஞ் போனஸ் (BUP) 9 I 0 இஎம்ஐ வசதியுடன் ஏற்கனவே ரியல்மி பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் ₹1,000 பலன். | ₹4,000 கிரெடிட் கார்டு இஎம்ஐ தள்ளுபடி அல்லது 2000 BO + 2000 BUP 12 | 0 இஎம்ஐ வசதியுடன் கிஃப்ட்: ரியல்மி பட்ஸ் T200 ஏற்கனவே ரியல்மி பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் ₹1,500 பலன். ₹99 செலுத்தி முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு: ரியல்மி வாட்ச் S2 வாங்குவதற்கான 50% தள்ளுபடி வவுச்சர்+ 1 வருட எக்ஸ்டென்டட் வாரண்டி | ₹ 35,999 |
| 8GB + 256GB | ₹ 41,999 | ₹ 37,999 | ||||
| 12GB + 256GB | ₹ 44,999 | ₹ 40,999 | ||||
| ரியல்மி 16 ப்ரோ 5G | 8GB + 128GB | ₹ 31,999 | கிரெடிட் கார்டு இஎம்ஐ மூலம் ₹3,000 வரை தள்ளுபடி (10|0 இஎம்ஐ வசதியுடன்) அல்லது முழுத் தொகையை செலுத்தினால் ₹1,500 உடனடி தள்ளுபடி. கிஃப்ட் பேக் + 1 வருட எக்ஸ்டென்டட் வாரண்டி | ₹3,000 பேங்க் ஆஃபர் அல்லது ₹5,000 எக்ஸ்சேஞ் போனஸ் (6|0 இஎம்ஐ வசதியுடன்). ஏற்கனவே ரியல்மி பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் ₹1,000 பலன். | ₹3,000 வரை கிரெடிட் கார்டு இஎம்ஐ தள்ளுபடி அல்லது ₹1,500 பேங்க் ஆஃபர் + ₹2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் (9|0 இஎம்ஐ வசதியுடன்) கிஃப்ட்: ரியல்மி பட்ஸ் T200 ஏற்கனவே ரியல்மி பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் ₹1,500 பலன். ₹99 செலுத்தி முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு: ரியல்மி வாட்ச் S2 வாங்குவதற்கான 50% தள்ளுபடி வவுச்சர்+ 1 வருட எக்ஸ்டென்டட் வாரண்டி | ₹ 28,999 |
| 8GB + 256GB | ₹ 33,999 | ₹ 30,999 | ||||
| 12GB + 256GB | ₹ 36,999 | ₹ 33,999 | ||||
| கிடைக்குமிடம் – பிளிப்கார்ட், realme.com மற்றும் ரீடெயில் ஸ்டோர்கள் | ||||||
| ரியல்மி பட்ஸ் ஏர்8 | |||
| புராடக்ட் | விலை (MOP) | சலுகைகள் | நிகர விலை (NEP) |
| ரியல்மி பட்ஸ் ஏர்8 | ₹ 3,799 | ₹ 200 தள்ளுபடி | ₹ 3,599 |
| கிடைக்குமிடம் – பிளிப்கார்ட், அமேசான், realme.com மற்றும் ரீடெயில் ஸ்டோர்கள் | |||
| ரியல்மி பேட் 3 | ||||
| புராடக்ட் | வேரியண்ட் | விலை (MOP) | சலுகைகள் | நிகர விலை (NEP) |
| ரியல்மி பேட் 3 | 8 GB + 128 GB WIFI | ₹ 26,999 | பேங்க் / UPI மூலம் பணம் செலுத்தும்போது ₹2,000 வரை கூடுதல் தள்ளுபடி + 6 மாதங்கள் வரை வட்டி இல்லா இஎம்ஐ | ₹ 24,999 |
| 8 GB + 128 GB 5G | ₹ 29,999 | ₹ 27,999 | ||
| 8 GB + 256 GB 5G | ₹ 31,999 | ₹ 29,999 | ||
| கிடைக்குமிடம் – பிளிப்கார்ட், realme.com மற்றும் ரீடெயில் ஸ்டோர்கள் | ||||
