General

பள்ளியில் மோசடி: கேள்விக்குறியான ஏழை மாணவர்களின் கல்வி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education – Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தொண்டு நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH – NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அப்பள்ளியில் இலவசமாக கல்வி பயின்றுவந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது.

மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளியின் சொத்துக்களை சிலர் சட்ட விரோதமாக விற்பனை செய்து ஊழல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பத்திரிக்கையாளர் சிவராமன் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தற்போதைய செயலரை பணி நீக்கம் செய்து, புதிதாக செயலரை பணியில் அமர்த்தி அங்கு பயிலும் பல ஏழை மாணவர்களின் கல்வியை காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *