புதுப்பிக்கப்பட்ட வாசன் கண் மருத்துவமனை தாம்பரத்தில் திறப்பு
தாம்பரத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வரும் வாசன் கண் மருத்துவமனை பல நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு ஞாயிறு ஈஸ்டர் தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது.
அம்மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான கௌசிக், அசோகன், இந்து கோவிந்தராஜ், கணேஷ், உமா மகேஸ்வரி மற்றும் அப்பகுதியின் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையை குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய மருத்துவர்கள் நாடு முழுவதும் 150 – க்கும் மேற்பட்ட கிளைகளோடு இயங்கி வரும் வாசன் கண் மருத்துவமனை, சென்னையில் 12 கிளைகளை கொண்டுள்ளது.
தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள தாம்பரம் கிளை கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மக்களுக்கு நவீன உயர்தர சிகிச்சையை வழங்கும் பொருட்டு தற்போது பல புதிய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனை கட்டிடத்தில் அதிநவீன உபகரணங்களுடன் கண் அறுவை சிகிச்சை கூடமும் உள்ளது.
கிளௌகோமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள், விழித்திரை அறுவை சிகிச்சைகள், கண் பார்வை, குழந்தை மருத்துவம் மற்றும் கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகள் இங்கு வழங்கப்படவுள்ளன.
இந்த மருத்துவமனையை மருத்துவர்கள் கணேஷ், உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கி நடத்துவர் என்று தெரிவித்தனர்.