ஃப்ரீடம் அட் மிட்நைட்டின் 2-வது டீசரை Sony LIV வெளியிட்டுள்ளது
சென்னை: இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஃப்ரீடம் அட் மிட்நைட் தொடரின் படைப்பாளர்கள் அதன் இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளனர். Dominique Lapierre மற்றும் Larry Collins ஆகியோரின் புகழ்பெற்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் அட் மிட்நைட் ஒரு அற்புதமான அரசியல் த்ரில்லர் ஆகும், இது 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததைச் சுற்றி நடத்த முக்கியமான நிகழ்வுகளை சக்திவாய்ந்த முறையில் உயிர்ப்பிக்கிறது.
இது குறித்து இயக்குனர் நிகில் அத்வானி குறிப்பிடுகையில், “ஃப்ரீடம் அட் மிட்நைட்” என்பது வரலாற்றில் இந்தியாவின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றின் சக்திவாய்ந்த பார்வையாகும். இந்த நிகழ்ச்சி கவனமான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அந்தக் காலத்தின் உணர்ச்சி மற்றும் அரசியல் குழப்பங்களைக் காட்டுகிறது. இது முக்கிய வரலாற்று நபர்களை ஆழமாகப் பார்க்கிறது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்கு வளர்ச்சியடைந்து, நடிகர்கள் தங்கள் பாத்திரங்களில் ஒன்றிப்போக அனுமதிக்கிறது. கதை அரசியலைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு சகாப்தத்தை வடிவமைத்து தேசத்தின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மனித அனுபவங்கள், உணர்ச்சிகள் மற்றும் சவால்களின் மீள்பார்வையாக இது திகழ்கிறது” என்று கூறினார்.
ஸ்டுடியோநெக்ஸ்டுடன் இணைந்து Emmay Entertainment (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரித்துள்ள இந்த நிகழ்ச்சியை நிகில் அத்வானி ஷோரன்னராகவும் இயக்குனராகவும் இயக்குகிறார் அபிநந்தன் குப்தா, அத்விதியா கரேங் தாஸ், குந்தீப் ஷர்மா, திவ்யவந்தி கௌர் சாராபாய், மற்றும் ஈதன் டெய்லர் ஆகியேரார் இதன் கதையை வடிவமைத்துள்ளனர்.
இந்தத் தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தந்த் குப்தா, மகாத்மா காந்தியாக சிராக் வோஹ்ரா, சர்தார் வல்லபாய் பட்டேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிஃப் ஜகாரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி குவா நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சா, லிஷ்கா மென்டோன்சா ஆகியோர் நடித்துள்ளனர். அலி கான், V.P.மேனனாக KC சங்கர், லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனாக லூக் மெக்கிப்னி, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்க்கிபால்ட் வேவலாக அலிஸ்டர் ஃபின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ குல்லம், சிரில் ராட்கிளிஃப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்