தமிழ் செய்திகள்

பார்வை திறன் குறைபாடு உடைவர்களுடன் லயன்ஸ் கிளப் ஆல்பா சிட்டி நண்பர்கள் தீபாவளி கொண்டாட்டம்

சென்னை: சென்னை ஐயப்பன்தாங்கலில் செயல்பட்டு வரும் தனியார் கண்பார்வை குறைபாடு கொண்டோருக்கான இல்லத்திற்கு லயன்ஸ் கிளப் ஆப் ஆல்பா சிட்டி உறுப்பினர்கள் உணவு வழங்குவதற்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த சிறுமிகள் அனைவரும் வருகிறார்கள் உணவு உள்ளிட்ட உணவு பொருட்களை தருகிறார்கள் நீங்கள் எங்களை வெளியே அழைத்து சென்று ஐஸ் கிரீம் வாங்கி தருவீர்களா என கேட்டுள்ளனர்.

கண்பார்வை குறைபாடு உள்ள சிறுமிகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பிறரை மகிழ்வித்து மகிழ் என்பது போன்று சிறுமிகளின் ஆசையை நிறைவேற்றி அளவு கடந்த மகிழ்ச்சி அடைய செய்துள்ளனர் ஆல்பா சிட்டி உறுப்பினர்கள்.

ஐயப்பன் தாங்கலிலுள்ள கண்பார்வையற்ற ஆதரவற்ற இல்லத்திலிருந்து மாவட்ட ஆளுநர் A.T.ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் 23 கண்பார்வை குறைபாடு கொண்டவர்களை வாகனத்தில் அழைத்துக் கொண்டு தாம்பரத்தில் உள்ள அன்னை இந்தியா என்டர்பிரைஸ் என்ற அலுவலகத்திற்கு சென்று அங்கு கண் பார்வை குறைபாடு கொண்ட 23 பேருக்கும் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, பன்னீர் தெளித்து, மல்லிகை பூ அணிவித்து அவர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகளை வழங்கி மகிழ்வித்துள்ளனர்.

பின்னர் அனைவருக்கும் பிரபல உணவகத்தில் காலை உணவு அருந்திய பின்னர், அங்கிருந்து வாகனத்தில் அனைவரையும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சென்று பல்வேறு விளையாட்டுகளை விளையாடிய கண்பார்வை குறைபாடு கொண்டவர்கள் அளவு கடந்த மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.

பின்னர் பார்வை குறைபாடு கொண்ட சிறுவர்கள் சிறுமிகள் ஆசைப்பட்டதை போன்று அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அவர்களின் தீபாவளி பண்டிகையை அளவில்லா மகிழ்ச்சி பண்டிகையாக மாற்றியுள்ளனர்.

லயன்ஸ் கிளப் ஆல்பா சிட்டியின் சாசன தலைவர் லயன் தியாகராஜன், கண்பார்வை குறைபாடு கொண்ட அனைவரையும் அழைத்து சென்று அனைத்து செலவையும் ஏற்றுக் கொண்ட ரமேஷ் உள்ளிட்ட லயன்ஸ் கிளப் ஆல்பா சிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கண்பார்வை குறைபாடு கொண்டவர்கள் அளவுகடந்த மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *