டென்னிஸ் பிரீமியர் லீக் சீசன் 6-ல் 238 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்தது சென்னை ஸ்மாஷர்ஸ் அணி
மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் டென்னிஸ் பிரீமியர் லீக் சீசன் 6-ல் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 238 புள்ளிகளை சென்னை ஸ்மாஷர்ஸ் அணி பெற்றுள்ளது.
அரையிறுதிக்கு இது போதுமானதாக இல்லாத போதிலும் இம்முறை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் பாந்தர்ஸ் அணியுடன் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி மோதியது.
ஆட்டத்தின் விவரங்கள் பின்வருமாறு:
● கோனி பெரின் vs எகடெரினா கசியோனோவா: 16-9
● ஹ்யூகோ காஸ்டன் vs சுமித் நாகல்: 10-15
● கோனி பெர்ரின் & ரித்விக் பொல்லிபாலி vs எகடெரினா கசியோனோவா & விஜய்: 10-15
● ஹ்யூகோ காஸ்டன் & ரித்விக் பொல்லிபள்ளி vs சுமித் நாகல் & விஜய்: 12-13
கோனி பெர்ரின், ஹ்யூகோ காஸ்டன் மற்றும் ரித்விக் பொல்லிபாலி ஆகியோர் சிறப்பான அணிக்கு சிறப்பாக பங்களிப்பை வெளிப்படுத்தினர்.