கார்த்திகை மகா தீபத்தை ஸ்ரீ மந்திரின் நேரலை தரிசன அனுபவத்துடன் கொண்டாடுங்கள்
- அருணாசலேஸ்வர தீபத்தின் நேரலை தரிசனத்துடன் புனித அருணாசல தீர்த்த சிவ பார்வதி கல்யாணம், மகா ருத்ர ஹோமத்தில் ஆன்மிக விழிப்புணர்வு, விடுதலை பெறப் பங்கேற்கவும்
சென்னை: இருளின் மீதான ஒளியின் நித்திய வெற்றியைக் கொண்டாடும், கார்த்திகை மகா தீபத்தின் புனித திருவிழா லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் நிறைந்தது. இந்தியாவின் மிகப்பெரிய பக்தித் தளமான ஸ்ரீ மந்திர், டிசம்பர் 13, 2024 வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் கார்த்திகை மகா தீபத்தின் நேரலை சிறப்பு தரிசனம் மூலம் பக்தர்கள் தரிசிப்பதற்கான சிறப்பு முயற்சியை பெருமையுடன் அறிவிக்கிறது.
மங்களகரமான கார்த்திகை மகா தீபத் திதியுடன் கூடிய இந்த புனிதமான நிகழ்வை வீட்டில் இருந்தபடியே பக்தர்கள் தரிசிக்க முடியும். புனித நகரமான திருவண்ணாமலையில் ஏற்றப்படும் அருணாசலேஸ்வரர் மகா தீபம், அருணாச்சல தீர்த்த சிவன் பார்வதி கல்யாணம், மகா ருத்ர ஹோமம் ஆகியவற்றை நேரலை ஒளிபரப்பில் தரிசிக்க முடியும்.
தெய்வீக ஒளியைக் குறிக்கும் திருவிழாவான கார்த்திகை மகா தீபம் தென்னிந்தியா முழுவதும் ஈடு இணையற்ற உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு அருணாசலேஸ்வரர் கோவிலில் நிறைவடைகிறது. அங்கு புனிதமான அருணாசல மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுவது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக (நெருப்புத் தூண்) வெளிப்படும் புராணக்கதையில் வேரூன்றிய இந்த திருவிழா, இருளின் மீதா ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது. அத்துடன் உள் வெளிச்சம் பெறுவதையும், கர்ம சுழற்சியில் இருந்து விடுதலைக்கான பாதையையும் வழங்குகிறது.
உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் இந்த ஆன்மீக பயணத்தில் சேர உதவும் வகையில் ஸ்ரீ மந்திரின் இந்த முன்முயற்சி பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கிறது. இந்த நேரலை ஒளிபரப்பில் சிறப்பு அம்சமானது, மகா ருத்ர ஹோமத்தையும் உள்ளடக்கியது. இது எதிர்மறைதன்மையை அகற்றி செழிப்பை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் அருணாசல தீர்த்த சிவன் பார்வதி கல்யாணம், அமைதி, ஞானத்திற்கான தெய்வீக ஆசீர்வாதங்களைத் தரும் ஒரு புனித சடங்கு. இதில் பங்கேற்பவர்கள் தியானம் செய்யலாம், மந்திரங்களை உச்சரிக்கலாம் அல்லது சடங்குகளுடன் ஸ்தோத்திரங்களை சொல்வதன் மூலம் சிவபெருமானுடன் ஆழமான தொடர்பை வளர்த்துக்கொள்ளகலாம்.
“ஆன்மீகம் என்பது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்போது, அது அர்த்தமுள்ளதாக மாறும். புனிதமான இந்தத் திருவிழாவை பக்தர்கள் எங்கிருந்தும் தரிசிக்க கார்த்திகை மகா தீபம் நேரலை சிறப்பு தரிசனம் அனுமதிக்கிறது. ஆன்மிக நம்பிக்கை, தொடர்பை அவர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக கொண்டுவருகிறது. அவர்கள் எங்கிருந்தாலும் ஆன்மீக அனுபவங்களை, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது” என்று ஸ்ரீ மந்திர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் சச்சன் கூறினார்.
கார்த்திகை மகா தீபத்தின் உருமாற்றும் ஆற்றலைத் தழுவி, அருணாசலேஸ்வர தீபத்தின் தெய்வீக ஒளியை தங்கள் தளத்தில் காண ஸ்ரீ மந்திர் பக்தர்களை அழைக்கிறது. நேரலை தரிசனத்தை ஸ்ரீ மந்திர் செயலி மூலம் அணுக முடியும். இது தடையற்ற மற்றும் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை உறுதிசெய்யும். இந்த புனிதமான கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் சிவபெருமானின் நித்திய ஒளி அமைதி, செழிப்பு மற்றும் விடுதலையை நோக்கி உங்களை வழிநடத்தட்டும்.
தமிழ்ச் சுட்டி: https://www.srimandir.com/epuja/maha-rudra-homa-live-13th-3-dec-24-
தெலுங்கு சுட்டி: https://www.srimandir.com/epuja/333-maha-rudra-homa-live-13th-2-dec-24