தமிழ் செய்திகள்

ரியல்மி நிறுவனம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி P3 Pro 5G மற்றும் ரியல்மி P3x 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது: அதிநவீன அம்சங்களுடன் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கிடும் இவை முறையே ரூ .21,999 மற்றும் ரூ .12,999 விலையிலிருந்து தொடங்குகிறது

சென்னை: இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி, இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரியல்மி P3 சீரிஸ் 5G ஐ பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. ரியல்மி P3 Pro 5G மற்றும் ரியல்மி P3x 5G ஆகிய ஸ்மார்ட்போன்களைக் கொண்ட இந்த சீரிஸ், இந்திய நுகர்வோருக்காக அதிநவீன கண்டுபிடிப்புகளை வழங்க வேண்டும் எனும் பிராண்டின் கொள்கையை பிரதிபலிக்கிறது. பெர்ஃபார்மென்ஸ், ஆயுள் மற்றும் ஸ்டைலில் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேஞ் செக்மென்ட்டில் புதிய தராதரத்தை நிறுவவுள்ளது. இது அதன் பயனர்களுக்கு செக்மென்ட்-ஃபர்ஸ்ட் கண்டுபிடிப்புகளை வழங்குவதில் ரியல்மி கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது.

ரியல்மி P3 Pro 5G மற்றும் ரியல்மி P3x 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் பெர்ஃபார்மென்ஸில் புதிய சாதனையைப் படைப்பதோடு மட்டுமல்லாமல், மிகவும் போட்டி நிறைந்த சந்தையில் தனித்து நிற்கும் வகையில் வடிவமைப்பில் அற்புதமான அம்சங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. லீப்-ஃபார்வர்டு தொழில்நுட்பத்திற்கான ரியல்மியின் உறுதிப்பாட்டுக்கு இணங்க , இரண்டு ஸ்மார்ட்போன்களும் கைவினைத்திறன், அதிநவீன அம்சங்கள் மற்றும் நவீன, தொழில்நுட்ப ஆர்வலரான நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒப்பிடமுடியாத ஆயுள் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளன.

இந்த அறிமுகம் குறித்து ரியல்மி செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “புதுமை மற்றும் பயனரை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களான ரியல்மி P3 Pro 5G மற்றும் ரியல்மி P3x 5G ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரியல்மி P3 Pro 5G, அதன் பிரகாசமான நிறத்தை மாற்றுகின்ற ஃபைபர் மற்றும் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட் மூலம், தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த அனுபவத்தை வழங்குகிறது. ரியல்மி P3x 5G, அதன் பெரிய பேட்டரி மற்றும் உயர்மட்ட வாட்டர் ப்ரூஃப் பெர்ஃபார்மென்ஸுடன், கடினமான நிலைமைகளைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் சிறந்த பெர்ஃபார்மென்ஸ், பிரம்மிக்க வைக்கும் விஷூவல் மற்றும் டியூரபிளிட்டியை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் எங்கள் பயனர்களுக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறது.

“ரியல்மி P3 சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட்டில் விற்பனை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய கண்டுபிடிப்பு மற்றும் பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறோம். ரியல்மி மூலம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம், ரியல்மி P3 சீரிஸ் 5G அதன் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் புதுமையான வடிவமைப்புடன் தனித்து நிற்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் பயனர்களுக்கு அதிநவீன ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம், மேலும் அவர்கள் எங்கள் தளத்தின் மூலம் சிறந்த தொழில்நுட்பத்தை பெறுவதை உறுதி செய்கிறோம் “என்று பிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் கூறினார்

ரியல்மி P3 Pro 5G ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் புதிய சாதனையைப் படைக்கிறது, இது ஒரு நெபுலாவின் மாறிக்கொண்டேயிருக்கும் அழகால் ஈர்க்கப்பட்ட பிரகாசமான உலகின் முதல் நிறத்தை மாற்றுகின்ற ஃபைபர் பேக் பேனலுடன் வருகிறது. இந்த புதுமையான பேனல் இருட்டில் பிரகாசிக்கிறது, சுற்றுப்புற ஒளியை ஏற்கிறது, மேலும் டெக்ஸர்ஸ் மற்றும் கலர்கள் இணைந்து மனதை மயக்கும் ரம்மியத்தை உருவாக்குகிறது, இது தொழில்நுட்பம் மற்றும் அழகியலை ஒன்றிணைப்பதில் உள்ள ரியல்மியின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்திய பயனர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், P3 Pro ஸ்மார்ட்போன் மூன்று அதிரடியான மற்றும் இந்தியாவுக்கென பிரத்யேகமான கலர்களில் வருகிறது, அதாவது நெபுலா க்ளோ, கேலக்ஸி பர்பிள் மற்றும் சாட்டர்ன் பிரவுன் ஆகிய கலர்களில் வருகிறது – ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்க வேண்டும் என பயனர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டன.

இதன் செக்மென்ட்-ஃபர்ஸ்ட் குவாட்-கர்வ்டு எட்ஜ்-ஃப்ளோ டிஸ்ப்ளே ஆனது 1.5K ரெசல்யூஷன்,அல்ட்ரா-ஸ்மூத் விஷூவல்ஸுக்கான 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஆகியவற்றுடன் ஆழ்ந்து ரசிக்கும் வகையில் எட்ஜ்-டு-எட்ஜ் வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது. இது செக்மென்ட்-ஃபர்ஸ்ட் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட் மூலம் இயங்குகிறது இது 4nm ப்ராசஸில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அண்டூடூ (Antutu) ஸ்கோர் 800K ஐ விட அதிகமாக உள்ளது. சிறந்த கேமிங்கை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டது, P3 Pro ஆனது BGMI ஐ நிலையான 90FPS இல் சப்போர்ட் செய்கிறது, இது BGMI இ-ஸ்போர்ட்ஸ் டோர்னமென்ட் ஸ்டாண்டர்ஸை பூர்த்தி செய்ய கிராஃப்டன் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் GT பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ளது, இது டச் ரெஸ்பான்ஸ் மற்றும் பிரேம் ரேட் ஸ்டெபிளிட்டியை மேம்படுத்துகிறது,

அதிகபட்ச பெர்ஃபார்மென்ஸைத் தக்கவைக்க, P3 Pro இல் செக்மென்ட்டிலேயே மிகப்பெரிய 6K ஏரோஸ்பேஸ் விசி கூலிங் சிஸ்டம் உள்ளது, இது நீட்டிக்கப்பட்ட கேமிங் அமர்வுகளின் போது கூட பிரேம் டிராப்ஸ் இல்லாமல் அதிக பிரேம் ரேட்டை உறுதி செய்கிறது. 6000mAh டைட்டன் பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது, இது செக்மென்ட்-லீடிங் என்ட்யூரன்ஸை வழங்குகிறது – வெறும் 5 நிமிடங்களில் 15% சார்ஜ் ஆகிறது, இது 1.36 மணிநேர தடையற்ற கேமிங் பிளேவை சப்போர்ட் செய்கிறது. போட்டோகிராபி ஆர்வலர்களுக்கென அவர்கள் பயனடையும் வகையில் செக்மென்ட்டிலேயே மிகப்பெரிய சோனி IMX896 OIS கேமரா சென்சார் உள்ளது. இது தெள்ளத்தெளிவான, சிறந்த காட்சிகளைப் படம்பிடிக்க அல்ட்ரா-கிளியர் AI இமேஜிங், லோ-லைட் போர்ட்ரெயிட் ப்ளர் மற்றும் AI ஸ்னாப் மோடை வழங்குகிறது . கூடுதலாக, ரியல்மி P3 Pro ஆனது IP66/IP68/IP69 ரேட்டிங்குடன் இந்த ஸ்மார்ட்போன் இண்டஸ்ட்ரியிலேயே மிக உயர்ந்த டியூரபிளிட்டி ஸ்டாண்டர்ட்ஸைக் கொண்டுள்ளது – இது தூசி, தண்ணீர் மற்றும் வெப்பநிலையிலிருந்து நல்ல பாதுகாப்பு வழங்குகிறது – இது அன்றாட பயன்பாடுக்கும் சரி அதிதீவிரமான சாகச செயல்பாடுகளுக்கும் சரி சிறந்தது.

ரியல்மி P3x 5G ஸ்மார்ட்போன், டியூரபிளிட்டி, பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஸ்டைல் ஆகிய அம்சங்கள் ஒருசேரக் கொண்ட பவர்ஹவுஸ் ஆகும், இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒரு சிங்கிள் சார்ஜில் 473.58 மணிநேர ஸ்டாண்ட்பை டைம் அல்லது 35 மணிநேர டாக் டைமை வழங்குகிறது. உலகின் முதல் டைமென்சிட்டி 6400 5G சிப்செட் மூலம் இயங்குகிறது, இது 420K க்கும் அதிகமான அண்டூடூ (Antutu) ஸ்கோருடன் 6nm ப்ராசஸில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இது தடையற்ற மல்டி-டேஸ்கிங் மற்றும் கேமிங்கை உறுதி செய்கிறது. P3x 5G அதன் உறுதியான மற்றும் செம்மை யாக்கப்பட்ட வடிவமைப்புடன் தனித்து நிற்கிறது, இது மிட்நைட் ப்ளூ, லூனார் சில்வர் மற்றும் ஸ்டெல்லர் பிங்க் ஆகிய மூன்று பிரம்மிக்க வைக்கும் கலர்களில் கிடைக்கிறது – பலதரப்பட்ட இந்தியர்களின் ரசனைக்கேற்ப உள்ளது. அதன் 120Hz ஐ கம்ஃபோர்ட் டிஸ்ப்ளே நல்ல தெளிவான காட்சிகளையும் மற்றும் ஃபுல்-சீன் ஐ புரொடக்ஷனையும் வழங்குகிறது, இது கேமிங், ஸ்ட்ரீமிங் அல்லது ப்ரௌசிங்கின் போது நீட்டிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு ஏற்றது.

அதிக காலம் உழைப்பதற்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள, P3x 5G ஆனது, IP69 வாட்டர்ப்ரூப் ரேட்டிங்கைக் கொண்ட செக்மென்ட் ஃபர்ஸ்ட் மற்றும் ஒரே ஸ்மார்ட்போனாகும், இது அதிக வெப்பநிலை, உயர் அழுத்தமுள்ள வாட்டர் ஜெட் போன்றவற்றிலிருந்து அதிக பாதுகாப்பை வழங்குகிறது – இது சாகச விரும்பிகளுக்கும் கடினமான சூழலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *