சுந்தரம் ஃபைனான்ஸ் அறிமுகம் செய்யும் டிஜிட்டல் டெபாசிட் வசதி
இந்தியாவில் மக்களின் அதிக நம்பிக்கையைப் பெற்ற வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் முன்னணி வகிக்கும் சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், டிஜிட்டல் டெபாசிட் வசதி என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலம் சேமிப்புகள் செய்வதை அதிக எளிமையானதாகவும், மிகுந்த பாதுகாப்பானதாகவும் மற்றும் எளிதில் பயன்படுத்தி பயனடையக்கூடியதாகவும் ஆக்கியிருக்கிறது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் இயங்கி வரும் சுந்தரம் ஃபைனான்ஸ் ஆழமான நம்பிக்கை மற்றும் நிதிசார் பாதுகாப்பு என்பதோடு இணைத்தே பார்க்கப்படுகின்ற நிதி நிறுவனமாக நாடெங்கிலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் என்ற வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கும் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் டெபாசிட்கள் (வைப்புத்தொகை), 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக ICRA மற்றும் CRISIL தரமதிப்பீடு அமைப்புகளால் AAA என்ற தரவரிசையை தொடர்ந்து பெற்றிருக்கின்றன.
மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை இந்த தரமதிப்பீடுகள் குறிக்கின்றன. இப்போது சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு டெபாசிட் கணக்கைத் தொடங்குவது மிக மிக எளிதானது. ஒரு சில கிளிக்குகளில் இதனை வாடிக்கையாளர்கள் செய்ய முடியும். மிக எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் செயல்முறை வழியாக வாடிக்கையாளர்கள் சௌகரியமாக டெபாசிட்களை முதலீடு செய்யலாம் மற்றும் அவர்களது டெபாசிட்களை நிர்வகிக்கலாம். கவர்ச்சிகரமான வட்டி வருவாயை வழங்குவதோடு, மன நிம்மதியையும் இனிய சேவை அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம்.
தங்களது இல்லங்களில் வசதியாக இருந்து கொண்டே தங்களது பணத்தை முதலீடு செய்து பெருக்குவதற்கு சுந்தரம் ஃபைனான்ஸ் வழங்கும் டிஜிட்டல் டெபாசிட் திட்டம் வழி வகுக்கிறது. டெபாசிட் கணக்கை தொடங்கவும், அதனை நிர்வகிக்கவும் மற்றும் விரும்பும்போது அதனை கண்காணிக்கவும் எளிதான வசதியை இது வழங்குகிறது. CERSAI – இடமிருந்து KYC விவரங்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் டிஜிட்டல் முறையிலான ஃபிக்சட் டெபாசிட் கணக்கைத் தொடங்குவதை ஒரு எளிதான செயல்முறையாக சுந்தரம் ஃபைனான்ஸ் ஆக்கியிருக்கிறது. இந்த ஆன்லைன் பரிவர்த்தனையை இந்நிறுவனத்தின் இணையவாசல் வழியாகவும் மற்றும் SF நெக்ஸ்ட் செயலி வழியாகவும் எளிதாக மேற்கொள்ளலாம்.
“பல தலைமுறைகளாக நிதிசார் பாதுகாப்பில் ஆழமான நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக சுந்தரம் ஃபைனான்ஸ் இருந்து வருகிறது. எமது டிஜிட்டல் டெபாசிட் திட்ட அறிமுகத்தின் மூலம் முதலீடு செயல்முறையை இன்னும் எளிதானதாகவும், சிரமமற்றதாகவும் நாங்கள் ஆக்கியிருக்கிறோம். ஐந்து எளிதான படிமுறைகளில் வாடிக்கையாளர்கள் இப்போது டெபாசிட் செயல்முறையை பூர்த்தி செய்ய முடியும்; மற்றும் உடனடியாகவே E-TDR (எலக்ட்ரானிக் முறையிலான டெபாசிட் இரசீது) – ஐ பெற முடியும். தாங்கள் டெபாசிட் செய்த பணத்தின் நிதிசார் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய ஒரு நியமனதாரரை நியமிக்குமாறு தனிநபர் டெபாசிட்தாரர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். மேலும் தானியக்க முறையில் முதிர்வு தேதியில் பணம் கிடைப்பதையும், டெபாசிட்தாரர்கள் தேர்வு செய்யலாம். நிதிசார் பாதுகாப்பிற்காக AAA தரமதிப்பீடு மற்றும் பல தசாப்தங்களாக இருந்து வரும் ஆழமான நம்பிக்கையின் பின்புல ஆதரவோடு இயங்கி வரும் நாங்கள் முழுமையான மனநிம்மதியை ஏதுவாக்க எப்போதும் சிறப்பான தேவை தரங்களைப் பின்பற்றுகிறோம். முதலீடு செய்வதில் இனிய அனுபவம் எமது வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்வது எமது நிலையான செயல்பாடாக இருந்து வருகிறது.” என்று டெபாசிட்கள் துறையின் தலைவர் தண்டாயுதபாணி கூறினார்.
ஆன்லைனில் டெபாசிட் கணக்கைத் தொடங்க வருகை தரவும்: www.sundaramfinance.in