General

22000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட ‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024’ ஜனவரியில் நடைபெறுகிறது

சென்னை, 22 டிசம்பர் 2023: பிரபல மென்பொருள் நிறுவனமான ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் (Freshworks Inc.) மற்றும் சென்னை ரன்னர்ஸ் ஆகியவை இணைந்து 12 ஆவது ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 என்னும் மாரத்தான் போட்டியை வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதியன்று சென்னையில் நடத்துகிறது.

இதில், மாரத்தான் ஓட்ட வீரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என சுமார் 22000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள். இதில், சுமார் 35 சதவீதத்திற்கு மேலாக பெண்கள் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

42 கி.மீ., 32 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., என நான்கு பிரிவுகளில் நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியானது இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாரத்தான் போட்டியாக கருதப்படுகிறது.

இதனை மிகப்பெரிய மாரத்தான் போட்டியாக சர்வேதேச மாரத்தான் மற்றும் நீண்ட தூர ஓட்ட பந்தயங்களுக்கான சங்கம் (AIMS) சான்றளிக்கவுள்ளது.

சென்னை நேப்பியர் பாலம் அருகே துவங்கும் இப்போட்டியானது கடற்கரை சாலை வழியாக, கலங்கரை விளக்கம், அடையாறு, மத்திய கைலாஷ் வழியாக ஓ.எம்.ஆர் சாலையில் சென்று ஈ.சி.ஆரில் முடிவடைகிறது.

முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளை போலவே, இந்த ஆண்டும் இன்சுலின் பயன்படுத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு, சென்னையை சேர்ந்த பல பிரபல நிறுவனங்கள் பார்ட்னர்களாக உள்ளனர். லைஃப் ஸ்டைல் பார்ட்னராக பாஷ்யம், சில்வர் பார்ட்னராக சுந்தரம் ஃபைனான்ஸ் குரூப், மெட்ரோ பார்ட்னராக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மருத்துவ பார்ட்னராக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் முதல் பதில்வினை செயற்பாட்டாளர்களாக சிஆர் வாலன்ட்டியர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

மாரத்தான் நிகழ்வில் தாகத்தை தீர்க்கும் பார்ட்னராக லிம்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மாரத்தான் நிகழ்வில் எரிபொருள் பார்ட்னராக யுனிவெட் இடம்பெறுகின்றன.

மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு, சென்னை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இதுதொடர்பாக, சென்னை ரன்னர்ஸ் – ன் ரேஸ் இயக்குனர் V.P. செந்தில்குமார் கூறியதாவது:

“நாடெங்கிலும் புகழ்பெற்ற தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் மாரத்தான் – ன் 12-வது பதிப்பு சிறப்பாக நடைபெறவிருப்பதை அறிவிப்பதில் சென்னை ரன்னர்ஸ் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொள்கிறது.

முந்தைய ஆண்டு பதிப்பின் அடிப்படையில் அதனை மேலும் சிறப்பாக நடத்தும் நோக்கத்தோடு இன்னும் அதிக உற்சாகமூட்டும் அனுபவத்தை வழங்க நாங்கள் தயாராகிவருகிறோம்.

இந்நகரிலும் மற்றும் உலகளவிலும் மறக்க இயலாத சிறப்பான முத்திரையை இந்நிகழ்வு நிச்சயம் உருவாக்கும் என்று நம்பலாம்.

அபாட் வேர்ல்டு மாரத்தான் மேஜர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய அங்கீகாரம் இதற்கு சிறந்த சாட்சியமாகும்.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் – ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கிரிஷ் மாத்ருபூதம் பேசுகையில்,

சென்னை மாரத்தான் போன்ற பெரு மதிப்புமிக்க அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் ஃபிரெஷ்ஒர்க்ஸ் பெருமைகொள்கிறது.

உலகெங்கிலுமிருந்து மிக அதிக எண்ணிக்கையில் வீரர்கள் பங்கேற்புடன் சென்னையின் அழகிய சாலைகளின் வழியாக மாரத்தான் போட்டிகளில் ஓடுவது ஃபிரெஷ்ஒர்க்ஸ் – ல் பணியாற்றும் எங்கள் அனைவருக்கும் சிறப்பான மகிழ்ச்சி உணர்வையும், பெருமிதத்தையும் வழங்கும் என்பது நிச்சயம்.

உடற்தகுதியை தங்களது தினசரி செயல்பாட்டின் ஒரு அங்கமாக அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வமுடன் முன்வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்த மாரத்தான் நிகழ்வுக்காக பயிற்சியினை மேற்கொள்வது உடற்தகுதி செயல்பாட்டை தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மாரத்தான் போட்டி தொடர்பான தகவல்களுக்கு: https://thechennaimarathon.com/ என்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *