CINEMA

Advanced Glo Skin – அழகு சிகிச்சை மையம் துவக்கம்

Advanced Gro Hair நிறுவனத்தின் மற்றுமொரு நிறுவனமான Advanced Glo Skin அழகு சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நிறுவனங்களின் நிறுவனர் சரண்வேல், Advanced Glo Skin அழகு சிகிச்சை மையத்தின் லோகோவினை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இந்த மையங்களில் பயன்படுத்தப்படும் ஒன் ப்ரோ எனப்படும் அழகு சிகிச்சைக்கான பிரத்யேக இயந்திரத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் அந்நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள், நிர்வாகிகள், பிரான்சைஸ் பார்ட்னர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பாக பணியாற்றிவருபவர்களுக்கு நிறுவனர் சரண்வேல், பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள Advanced Glo Skin அழகு சிகிச்சை மையத்தில், ஹைட்ராஃபேஷியல், க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், ஃபில்லர்ஸ், த்ரெட் லிஃப்ட், ஃபுல் பாடி லேசர், ஃபேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் பல சிகிச்சைகள் தரப்படுகின்றன.

அழகியல் மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் காப்புரிமை பெற்ற உயர்தர இயந்திரங்களுடன் இந்த சிகிச்சை மையம் செயல்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *