ஆண் மலட்டுத்தன்மைக்கு AINU-வில் ஆன்ட்ராலாஜி துறை துவக்கம்
ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்க பிரத்யேக ஆன்ட்ராலாஜி துறை சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி மற்றும் யூராலஜி மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சி அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், மருத்துவர்கள் சஞ்சய் பிரகாஷ், அருண்குமார் பாலகிருஷ்ணன், வெங்கட் சுப்ரமணியம், மதிசேகரன் தங்கராசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இத்துறையின் தலைவராக ஆண்ட்ராலஜி பராமரிப்பு துறையில் மேலாய்வு மற்றும் சிறுநீரகவியல் பட்டம் பெற்ற மருத்துவர் சஞ்சய் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஆன்ட்ராலாஜி துறையில் மேலாய்வு பட்டம் (fellowship) பெற்ற ஒரே மருத்துவராக சஞ்சய் பிரகாஷ் விளங்குகிறார்.
இதுதொடர்பாக மருத்துவர் சஞ்சய் பிரகாஷ் கூறுகையில்,
குழந்தை பேரின்மைக்கு பெண்களை விட ஆண்களே முக்கிய காரணமாக உள்ளனர். ஆண்மலட்டுத்தன்மை என்பது தற்போது பரவலாக காணப்படுகிறது.
அதில், ஆணுறுப்பு விறைப்புத்தன்மையே முக்கிய குறைபாடாக உள்ளது. நாற்பது வயதை கடந்த ஆண்கள் சுமார் 30 முதல் 35 சதவீதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இம்மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்ட்ராலாஜி துறையில் ஆண் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு ஆண்குறி அதிர்ச்சி அலை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Shockwave Therapy எனப்படும் இந்த சிகிச்சை முறை Dornier Aires 2 என்ற கருவி மூலம் இந்தியாவில் முதல் முறையாக அளிக்கப்படும் சிகிச்சையாகும்.
மேலும், இரத்த நாளங்களின் உள்புறமாக உள்ள அணுக்களின் (எண்டோதீலியல்) செயலிழப்பினை பற்றி அறியும் பரிசோதனை, PRGF ஊசி, ஆண்குறி செயற்கை உறுப்பு அறுவை சிகிச்சை, விந்தணு செயல்பாட்டை அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள், ஆண்குறி நீளம், சுற்றளவு ஆகியவற்றை அதிகரிக்கும் சிகிச்சை முறைகளும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.