ஏசியானா ஹவுசிங் கட்டுமான நிறுவனத்தின் மூத்த குடிமக்களுக்கான விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சி
ஏசியான ஹவுசிங் கட்டுமான நிறுவனம் மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையிலும், உயர்ரக குடியிருப்புகளையம் கட்டி வருகிறது.
சென்னை, டெல்லி, புனே உள்ளிட்ட நகரங்களில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகளை விற்பனை செய்து பராமரித்து வருகிறது.
அந்த குடியிருப்புகளில் குடியிருக்கும் மூத்த குடிமக்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஜாஷ்ன் என்னும் விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஜாஷ்ன் கலாச்சார நிகழ்ச்சியின் பத்தாவது பதிப்பு இன்று சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள ஏசியான சுபம் குடியிருப்பு வளாகத்தில் துவங்கியது. மூன்று நாட்களுக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும்.
கடந்த ஒரு மாதகாலமாக பாட்டு, நடனம், ரங்கோலி வரைதல், கேரம் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 150 மூத்த குடிமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் கலாச்சார நிகழ்ச்சியில் ஈஸியான ஹவுசிங் நிறுவனத்தின் மற்ற நகரங்களில் இருக்கும் மூத்த குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 500 பேர் பங்குகொள்வார்கள்.
இதுகுறித்து ஏசியான ஹவுசிங் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் அன்குர் குப்தா கூறுகையில்,
ஜாஷ்ன் ஒரு நிகழ்வு மட்டுமல்ல, இது வாழ்க்கையின் கொண்டாட்டம். மூத்த குடிமக்களிடையே மகிழ்ச்சியையும், தோழமையையும் காண்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வயது மூப்பு தொடர்பான தடைகளை உடைத்து, எங்கள் குடியிருப்பாளர்களின் அசைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்துகிறது என கூறினார்.
சென்னையில் ஜாஷின் 10வது பதிப்பை கொண்டாடுவது பெருமையளிக்கிறது. மூத்த குடிமக்களின் உற்சாகமான பங்கேற்பைக் காண்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று அந்நிறுவனத்தின் துணை தலைவர் சாந்தனு ரிஷி தெரிவித்தார்.