பாரதிய உப்போக்த சன்ரக்ஷன் சமிதி-யின் தமிழக தலைவராக வெங்கடேஷ் ராமராஜ் நியமனம்
புகழ்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான பாரதிய உப்போக்த சன்ரக்ஷன் சமிதி 1977 ஆம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
தற்போது, அதன் தலைவர் ராஜ்குமார் ஷர்மா தலைமையிலான பாரதிய உப்போக்த சன்ரக்ஷன் சமிதி, நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலப் பிரிவின் தலைவராக வெங்கடேஷ் ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவர் தேபாஷிஷ் தத்தா கலந்துகொண்டனர். தமிழகத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கடேஷ் ராமராஜ் அவர்களுக்கு நியமனம் கடிதம் வழங்கப்பட்டது.
பாரதிய உப்போக்த சன்ரக்ஷன் சமிதி அமைப்பினை தமிழகத்தில் வலுவுள்ளதாக மாற்றும் முயற்சியாக மாவட்டந்தோறும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றும், அதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தமிழக பாரதிய உப்போக்த சன்ரக்ஷன் சமிதி-யின் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று புதிதாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள தமிழக தலைவர் வெங்கடேஷ் ராமராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாரதிய உப்போக்த சன்ரக்ஷன் சமிதி அமைப்பினை சேர்ந்த பிஜோயா தன்னா, சிவராஜ் சம்பத், சுபாஷினி ரெட்டி, ஷைலஜா, திவ்யா மஞ்சு ஆகியோர் கலந்துகொண்டனர்.