பூமி அமைப்பும் ரியல்மி நிறுவனமும் இணைந்து தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 80,000 க்கும் மேற்பட்ட இளம் தலைமுறைக்கு அதிகாரம் அளிக்கின்றன
சென்னை: இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான பூமி, அதன் பல்வேறு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்திய இளைஞர்களின் விருப்பங்ளைப் புரிந்துகொள்ளும் ஒரு பிராண்டாக புதுமை மற்றும் மாற்றத்தை ஒருங்கிணைக்க ரியல்மி எப்போதும் தயாராக உள்ளது. இந்த கூட்டிணைவு மூலம், சரியான திறன்கள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அதிகமான இளைஞர்களுக்கு பிரகாசமான மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்க ரியல்மி விரும்புகிறது, இந்த திட்டம் மூலம் பூமி அமைப்பு ஒரு பெரிய சமூகத்தை அடையவும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கவும், வெற்றிகரமான எதிர்காலத்திற்கு தேவையான திறன்களை அவர்களுக்கு கற்பிக்கவும் உதவும்.
பூமி ஃபெல்லோஷிப், சோஷியல் அண்ட் எமோஷனல் லேர்னிங் (SEL) புரோகிராம், ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ், இக்னைட் ஷெல்டர்ஸ் மற்றும் பூமி கிளப்ஸ் போன்ற இதன் முக்கிய திட்டங்களை பூமி அமைப்பு இந்த கூட்டாண்மை மூலம் மிகவும் பயனுள்ளதாக மாற்றும். கல்வி, தலைமைப் பண்பு மற்றும் குடிமை ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் பின்தங்கிய இளைஞர்களின் முழுமையான வளர்ச்சியை இந்தத் திட்டங்கள் உறுதி செய்கின்றன. சரியான கருவிகள், வளங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரகாசமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்க ரியல்மி செயல்பட்டு வருகிறது.
பூமி பெல்லோஷிப்ஸ் என்பது ஒரு தனித்துவமான இரண்டு ஆண்டு ஊதிய அடிப்படையிலான திட்டமாகும், இது குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் கல்வி ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த இளவயது மாற்றத்தை உருவாக்குபவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, இதன் கீழ் இளைஞர்கள் குறைந்த வளம் கொண்ட அரசாங்கப் பள்ளிகளில் நேரடியாக வேலை செய்கிறார்கள், மாணவர்களுக்கு அடிப்படை திறன்களைக் கற்பிக்கிறார்கள் மற்றும் ஆசிரியர்களை ஆதரிக்கிறார்கள், பெற்றோருடன் தொடர்புகொள்கிறார்கள், இதன் மூலம் பள்ளியின் முழுமையான மாற்றத்தை செயல்படுத்துகிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் தன்னார்வ தொண்டு அமைப்பான பூமியால் தொடங்கப்பட்ட இந்த ஃபெல்லோஷிப், ஒரு எதிர்கால தலைவர்களின் குழுவை உருவாக்குகிறது. இவர்கள் முறையான கல்வி சீர்திருத்தங்களில் நேரடியாக ஈடுபடுகின்றனர். 2020 முதல், இந்த திட்டம் 21 ஆசிரியர்களைச் சேர்த்துள்ளது மற்றும் 5,352 மாணவர்களை ஆதரித்துள்ளது. இந்த திட்டத்தில் தற்போதுள்ள 75 ஆசிரிய உறுப்பினர்கள், 13,017 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆதரிக்கின்றனர். இதில் முன்னாள் மாணவர்கள் உள்ளனர், இவர்கள் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.. பூமி பெல்லோஷிப் சிறந்த பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் சமூக ஈடுபாடு மூலம் பள்ளிகளை மாற்றுவது மட்டுமல்லாமல், இது கல்வியில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கிறது.

சோஷியல் அண்ட் எமோஷனல் லேர்னிங் (SEL) புரோகிராம், மாணவர்களில் உணர்ச்சிப்பூர்வ முதிர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது மற்றும் அவர்களுக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கல்விச் சூழலை மேம்படுத்துவதே ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் நோக்கமாகும். இக்னைட் ஷெல்டர்ஸ் தங்குமிட இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகின்றன. பூமி கிளப்ஸ் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே தன்னார்வ உணர்வையும் தலைமைத்துவப் பண்பையும் வளர்க்கின்றன.
இந்த கூட்டாண்மை குறித்து பேசிய பூமி அமைப்பின் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சீனிவாசன் கூறுகையில், “நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதில் கல்வியின் சக்தியை பூமி அமைப்பில் உள்ள நாங்கள் நம்புகிறோம். ரியல்மி மூலம், இந்த இலக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிகிறது. ரியல்மி உடன், நாங்கள் எங்கள் தொடுஎல்லையை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், எங்கள் திட்டங்களை நம்பமுடியாத அளவுக்கு வேகமாக செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலுள்ள இளைஞர்களுடனான அவர்களின் வலுவான பிணைப்பு மற்றும் சமூக மாற்றத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை இந்த கூட்டணியை உண்மையிலேயே சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக ஆக்குகிறது. நாங்கள் ஒன்றாக இணைந்து, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கற்றுக்கொள்ளவும், வளரவும், முன்னணி வகிக்கவும் பயனுள்ள வாய்ப்புகளை உருவாக்குகிறோம்.
இந்த கூட்டணி குறித்து ரியல்மி இந்தியாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி தாவோ ஜாங் கூறுகையில், “ரியல்மியில், தொழில்நுட்பத்தை மக்களை இணைக்கும் ஒரு கருவியாக மட்டும் பார்க்காமல், அவர்கள் எவ்வாறு வளர்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் வெற்றி பெறுகிறார்கள் என்பதை மாற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் நாங்கள் பார்க்கிறோம். இளைஞர்களை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப பிராண்ட் என்ற வகையில், புதுமையான அம்சங்களை அறிமுகப்படுத்துவதைத் தாண்டி அடுத்த தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் தீவிரமாக பங்களிப்பது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். பூமி அமைப்புடனான எங்கள் கூட்டாண்மை இந்நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது இளைஞர்களுக்கு கல்வி, திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உண்மையிலேயே அவர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும். பூமி அமைப்பின் இந்த சிறந்த பணியை ஆதரிப்பதிலும், புதுமைகளை சமூக மாற்றத்துடன் இணைக்கும் இந்தப் பணியில் ஒருவராக நாங்களும் இருப்பதில் பெருமைக் கொள்கிறோம்.
இந்த திட்டங்கள் மூலம் இந்தியாவில் 70,000 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் 10,000 கல்லூரி மாணவர்களுக்கு தரமான கல்வி, அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை பெறுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர். பூமி அமைப்பும் ரியல்மி நிறுவனமும் சமூக மேம்பாட்டுக்கான தங்கள் உறுதிப்பாட்டை கூட்டாக மீண்டும் உறுதிப்படுத்துகின்றன, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான சமூகத்தை உருவாக்குவதில் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை உறுதி செய்கின்றன.