General

ஐபிஎல்-ன் ஐந்து முன்னணி அணிகளுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் பிஸ்லெரி

சென்னை: கோடைக்காலத்தின் கடும் வெப்பத்தோடு கிரிக்கெட் காய்ச்சலும் இந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஐபிஎல் போட்டியின் ஐந்து முன்னணி அணிகளான டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவற்றிற்கான அதிகாரப்பூர்வ ஹைடிரேஷன் (குடிநீர்) பார்ட்னராக கூட்டுவகிப்பில் இணைந்திருப்பதை இந்தியாவின் முன்னணி பேக்கேஜ்டு குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இண்டர்நேஷனல் பெருமையுடன் அறிவித்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் அதிகமான பாரம்பரியத்தை கொண்டிருக்கும் பிஸ்லெரி, தூய்மையான நீரை எப்போதும் போதுமான அளவு அருந்தி ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. பிஸ்லெரியின் குறிக்கோளும், செயல்பாடும் இன்றைய இளம் தலைமுறையினரோடு வலுவாகவும், நெருக்கமாகவும் பின்னிப்பிணைந்திருக்கிறது.

பிஸ்லெரி இன்டர்நேஷனலின் விற்பனை & சந்தையாக்கல் துறை இயக்குநர் திரு. துஷார் மால்ஹோத்ரா இக்கூட்டாண்மை தொடர்ந்து நீடிக்கப்படுவது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திக் கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகள் கால அளவில் விளையாட்டுகளோடு தொடர்புடைய சந்தையாக்கல் செயல்திட்டத்தை நாங்கள் வலுவாக உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறோம். ஐபிஎல்-ன் மிக பிரபலமான ஐந்து கிரிக்கெட் பிரான்சைஸ் அணிகளுடன் இந்த கிரிக்கெட் சீசனில் நுழைவதில் அளவில்லா உற்சாகம் கொள்கிறோம். Bisleri #DrinkItUp என்ற திட்டத்தின் கீழ் ஒரு சக்தி வாய்ந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தையாக்கல் விளம்பர திட்டத்தை நாங்கள் விரைவில் செயல்படுத்தவிருக்கிறோம். எமது பார்ட்னர் அணிகளின் வீரர்களது படங்களுடன் தனிப்பட்ட குறுகியகால பேக்குகள் இதில் இடம்பெறும். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்களில் பிராண்டிங், பிராடக்ட் அனுபவம் மற்றும் சிறப்பான அனுபவம் சார்ந்த முனையங்கள் ஆகியவற்றின் மூலம் எமது நுகர்வோர்களுக்கு அற்புதமான, ஆரோக்கியமான அனுபவத்தையும் நாங்கள் வழங்குவோம்.

இந்த விளம்பர பரப்புரை திட்டம் குறித்து மேலும் விளக்கி திரு. துஷார் பேசுகையில்: “பார்ட்னர் அணிகள் மற்றும் செல்வாக்கு செலுத்துநர்களை முன்னிலைப்படுத்துகிற டிஜிட்டல் உள்ளடக்க விளம்பரங்களையும் நாங்கள் அறிமுகம் செய்யவிருக்கிறோம். அத்துடன் நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான சிறப்பான போட்டிகளும் இதில் இடம்பெறும். இந்த விளம்பர பரப்புரை திட்டத்தின் கிரியேட்டிவ்களை காட்சிப்படுத்தும் எமது பிஸ்லெரி டிரக்குகள் நாடெங்கிலும் பயணிக்கும். நுகர்வோர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்கு, எமது ரீடெய்ல் பார்ட்னர்களுக்கு POSM பொருட்களையும் நாங்கள் வழங்குவோம். எமது சமீபத்திய டிவி தகவலளிப்பு விளம்பர திட்டத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் ஒரு புரட்சிகரமான ஊடக ஒத்துழைப்பிற்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டார்.

போதுமான அளவு குடிநீர் அருந்தி உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் செயல்பாட்டில் பிஸ்லெரி எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீசனுக்கான ஹைடிரேஷன் பார்ட்னராக முன்னணி குழுக்களோடு ஒத்துழைப்பில் இணைந்திருப்பதன் வழியாக தூய்மையான, நீரை அருந்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் தனது பணியை பிஸ்லெரி இன்னும் சிறப்பாக செய்கிறது. இந்நாட்டில் பல மாரத்தான் நிகழ்வுகள் மற்றும் பிற விளையாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பிஸ்லெரி தன்னை பார்ட்னராக இணைத்துக் கொண்டு செயலாற்றியிருக்கிறது. பல்வேறு தளங்களிலும், ஊடகங்களிலும் தூய்மையான குடிநீர் அருந்தி ஆரோக்கியத்தை காப்பதன் அவசியத்தை முன்னிலைப்படுத்துவன் மூலம் கிரிக்கெட் இரசிகர்கள் மட்டுமன்றி இளம் தலைமுறையினர் அனைவரோடும் ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்கும் தனது சிறப்பான முயற்சிகளை பிஸ்லெரி தொடர்ந்து செய்யும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *