AUTOMOBILE

பிஎன்சி மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் கன்னியாகுமரியில் திறப்பு

கன்னியாகுமரி, ஜூன் 15, 2024: மின்சார மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் கோவையைச் சேர்ந்த பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஷோரூமை கன்னியாகுமரியில் திறந்தது.

இந்த புதிய ஷோரூம் எண் 579ஏ, எம்.எஸ். சாலை, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் இந்நிறுவனம் புதிய ஷோரூம்களை தொடர்ந்து திறந்து வருகிறது.

திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக இந்நிறுவனத்தின், சேலஞ்சர் எஸ்110 மின்சார ஸ்கூட்டர் 99,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இதன் சேலஞ்சர் எஸ்125 ஸ்கூட்டர் 1,45,000க்கு கிடைக்கிறது.

இதன் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 ஸ்கூட்டரானது, இந்தியாவில் உள்ள முன்னணி 150சிசி மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில் இதன் சக்கரமானது 1354 மிமீ உடன் சிறப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேஸ், பவர்டிரெய்ன் மற்றும் 2.1 கிலோவாட் திறன் கொண்ட எட்ரால் 40 பேட்டரி ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ. வரை செல்லலாம். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3½ மணி முதல் 4 மணி நேரம் ஆகிறது. பேட்டரிக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தை இந்நிறுவனம் வழங்குகிறது.

இதன் சேலஞ்சர் எஸ்125 மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் ஸ்வாப்பிங் பேட்டரி தொழில்நுட்பத்துடன் இருமடங்கு திறன் கொண்ட அதாவது 4.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இது 3 கிலோவாட் பீக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்வாப்-ரெடி பேட்டரியுடன் போர்ட்டபிள் சார்ஜர் மற்றும் வேகமான சார்ஜர் வசதியுடன் வருகிறது.

புதிய ஷோரூம்திறப்பு குறித்து பிஎன்சி மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக கன்னியாகுமரியில் எங்களின் புதிய ஷோரூமை திறந்து இருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த புதிய ஷோரூம் திறப்பின் மூலம் எங்கள் வாகனங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் காரணமாக வாடிக்கையாளர்களை மின்சார வாகனங்களுக்கு மாறச்செய்வதோடு அவர்களின் பயணத்தையும் மிகவும் எளிமையாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும். கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

இந்த ஷோரூம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு www.bncmotors.in ஐ பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *