மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை எம்.பி.தயாநிதிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
ரோட்டரி சங்கம் மற்றும் மீனாட்சி ஷிவ்குமார் ஈஸ்வரன் நினைவு அறக்கட்டளை இணைந்து சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தியது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனாட்சி ஷிவ்குமார் ஈஸ்வரன் என்பவற்றின் நினைவாக “One Hope, One Walk” என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வினை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு நடைப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னையை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாநிதிமாறன், புற்றுநோய் தனக்கு வராது என்று யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.
ஆண், பெண் யாராக இருந்தாலும், புகை, மது உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் முறையாக பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதில், லயோலா கல்லூரியின் முதல்வர் டாக்டர் தாமஸ் அமிர்தம், சென்னை ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயஸ்ரீ ஸ்ரீதர், இளைஞர் சேவை இயக்குநர் டாக்டர் பார்கவி மகாலிங்கம் மற்றும் இளைஞர் சேவைகள் தலைவர் Rtn. சிவகுமார் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.