இந்திய டிரக் ஓட்டுனர்களின் திறனதிகாரத்திற்காக சென்னையில் கேஸ்ட்ரால் இந்தியா நடத்திய ‘கேஸ்ட்ரால் சிஆர்பி டர்போமேக்ஸ் பிரகதி கி பாத்ஷாலா’ பயிற்சி முகாம்
இரண்டு நாள் முகாமில் 500-க்கும் மேற்பட்ட டிரக் ஓட்டுநர்கள் திறன் மேம்பாடு பெற்றனர்
சென்னை: இந்தியாவின் முதன்மையான லூப்ரிகன்ட் உற்பத்தியாளரான கேஸ்ட்ரால் இந்தியா லிமிடெட், இந்திய டிரக் ஓட்டுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் தனது அடுத்த முயற்சியாக, ‘கேஸ்ட்ரால் சிஆர்பி டர்போமேக்ஸ் பிரகதி கி பாத்ஷாலா’ (Castrol CRB TURBOMAX Pragati Ki Paathshaala) என்ற நோக்கத்துடன் கூடிய முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட டிரக் ஓட்டுனர்களின் திறனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. ஓட்டுனர்களின் தொழில் முனைவோர் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் டிரக் ஓட்டுனர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் குறிக்கோளாகும். சென்னையில் இரண்டு நாட்கள் நிகழ்வாக இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. ‘கேஸ்ட்ரால் சிஆர்பி டர்போமேக்ஸ் பிரகதி கி பாத்ஷாலா’ திட்டம், நுண்ணறிவு மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் 500 க்கும் மேற்பட்ட டிரக் ஓட்டுனர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த முகாமில், மாநகரத்தில் உள்ள டிரக் ஓட்டுனர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அவர்களின் முன்னேற்றத்திற்கு #BadhteRahoAagey திறனதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான டிரைவிங், டிரக் உரிமையாளராக முன்னேற்றமடைவது, புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிக லாபம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களில் டிரக் ஓட்டுனர்களை மேம்படுத்துவதற்காக அறிவுப் பகிர்விற்கான பயிற்சி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்தியப் பொருளாதாரத்தின் சக்கரங்களை முன்னோக்கி நகர்த்தும் கருவியாக இருக்கும் டிரக்கிங் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு கேஸ்ட்ரால் இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகிறது. கேஸ்ட்ரால் சிஆர்பி டர்போமேக்ஸ் பிரகதி கி பாத்ஷாலா’ முன்முயற்சி, அதன் சமீபத்திய சந்தைப்படுத்தல் பரப்புரையான ‘#BadhteRahoAagey’ -ன் நீட்டிப்பு மற்றும் அர்ப்பணிப்பை வலுப்படுத்த உதவுகிறது.
கேஸ்ட்ரால் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. சந்தீப் சங்வான் கூறுகையில், “டிரக்கிங் சமூகம் எப்போதுமே கேஸ்ட்ரால் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது, மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் காணச்செய்யும் முயற்சிகள் மூலம் அதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இந்த முயற்சியின் மூலம், நாங்கள் டிரக் ஓட்டுநர்களை ‘சாலக் சே மாலிக்‘ (ஓட்டுனரிலிருந்து உரிமையாளராக) ஆக மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் விரும்புகிறோம். மேலும், சென்னையில் இத்திட்டத்திற்கு டிரக் ஓட்டுனர்களின் சிறந்த வரவேற்பை பெற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது, எதிர்காலத்தில் டிரக்கிங் சமூகத்தின் நல்வாழ்வுக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த எங்களை ஊக்குவித்துள்ளது.” என்று குறிப்பிட்டார்.
‘கேஸ்ட்ரால் சிஆர்பி டர்போமேக்ஸ் பிரகதி கி பாத்ஷாலா’ முயற்சிக்கு, சென்னையில் உள்ள உள்ளூர் போக்குவரத்து நிறுவனங்களும் மற்றும் அவைகளுக்கான சங்கங்களும் ஆதரவு அளித்தன. பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் மற்றும் #BadhteRahoAagey (முன்னேறிக் கொண்டே இருங்கள்) என்று அவர்களை ஊக்குவிக்கவும் இரண்டு நாள் நிகழ்ச்சியின் வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு, 500-க்கும் மேற்பட்ட டிரக் ஓட்டுநர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் டிரக்குகளில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இரண்டரை மாத காலஅளவில் நடத்தப்படும் இந்த கேஸ்ட்ரால் சிஆர்பி டர்போமேக்ஸ் பிரகதி கி பாத்ஷாலா பரப்புரைத் திட்டமானது, காசியாபாத் (உ.பி.) மற்றும் கலம்போலி (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்களிலிருந்து, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு டிரக்குகளுடன் வெவ்வேறு வழித்தடங்களில் பயணித்து, இந்தியாவின் நான்கு திசைகளிலும் பரப்புரையை மேற்கொள்ளும். இதுவரை, ‘காஸ்ட்ரோல் சிஆர்பி டர்போமேக்ஸ் பிரகதி கி பாத்ஷாலா’ செயல்திட்டமானது, 9400 டிரக் ஓட்டுனர்களுக்கு தனது பயணத்தின்போது திறன் பயிற்சியை வழங்கி மேம்படுத்தியுள்ளது.