SPORTS

தேடல் முடிந்தது! Castrol POWER1 MTVயில் இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரை வெளியிடுகிறது, வெற்றியாளர்களை அறிவித்துள்ளது

இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் – வெற்றியாளர்கள் அறிவிப்பு

வெற்றியாளர்: பில்லரிசெட்டி சாய் ரஹில்
1வது ரன்னர் அப்: ஜெகதீஸ் நாகராஜ்
2வது ரன்னர் அப்: பத்மினி மோகன் நாயர் சூர்யா

வெற்றியாளர்கள் மதிப்புமிக்க Castrol Honda LCR MotoGP™ குழுவின் ஐரோப்பாவில் உள்ள பந்தய களத்தில் பயிற்சி பெறுவார்கள்

1 ஜூன் 2024 அன்று இரவு 8:30 மணிக்கு MTV மற்றும் ஜியோ சினிமாவில் பிரத்தியேகமாக ஆக்ஷனைப் பாருங்கள்

சென்னை: Castrol POWER1 ஆனது Viacom18 உடன் இணைந்து இந்தியாவின் சிறந்த மோட்டார்சைக்கிள் திறமையாளர்களுக்கான பரபரப்பான தேடலைச் செய்து முடித்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பிரபலமான கரி மோட்டார் ஸ்பீட்வே ரேஸ்ட்ராக்கில் Castrol POWER1 வழங்கும் இந்தியாவின் அல்டிமேட் மோடோஸ்டார் ஆன் MTVஐ நடத்தி முடித்துள்ளது. தேசத்தின் சிறந்தவர்களிடையே கடுமையான போட்டியைக் கண்ட இந்த அற்புதமான நிகழ்வில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பில்லரிசெட்டி சாய் ரஹில், பெங்களூரைச் சேர்ந்த ஜெகதீஷ் நாகராஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பத்மினி மோகன் நாயர் சூர்யா ஆகியோரை இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மூன்று வெற்றியாளர்களும் வெகுமதியாக, ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற Castrol Honda LCR MotoGP™ டீமின் பந்தய அமைவிடத்தில் பிரத்யேகப் பயிற்சி பெறுவதற்கான ஒரு அரிதான வாய்ப்பைப் பெற்றனர்.

இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரின் இந்த ஆற்றல் நிரம்பிய பயணம், ஆடிஷன்கள், தேர்வு, பயிற்சி மற்றும் இறுதிப் பந்தயங்களில் இருந்து வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும், பைக் ஆர்வலர் கரண் குந்த்ராவால் நடத்தப்பட்டது, MTVயில் 1 மணிநேர சிறப்பு எபிசோடிலும், ஜியோசினிமாவில் மூன்று எபிசோட் தொடரிலும் 1 ஜூன் 2024 அன்று இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.

டிசம்பர் 2023 இல் அறிமுகம் செய்யப்பட்ட Castrol POWER1 மற்றும் Viacom18 இன் இந்த உற்சாகமான முயற்சி, நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களைக் கண்டுபிடித்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த முதல்முறை முயற்சியானது, மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும் 50,000 ஆர்வமுள்ள ரைடர்களை ஈர்த்தது, இதில் பொறியாளர்கள், வணிகர்கள், மெக்கானிக்கள், மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள் உட்பட பல்வேறு பின்னணியில் இருந்து பங்கேற்பாளர்கள் உட்பட மற்றும் இந்தியாவின் பைக்கிங் சமூகத்தின் உணர்வு மற்றும் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது. இதில், நுணுக்கமான தேர்வு செயல்முறை மூலம், 240 போட்டியாளர்கள் சென்னை, மும்பை, புதுதில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்ற நகர ஆடிஷன்களுக்கு வருவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தீவிர ஆய்வு மற்றும் தொடர்ச்சியான உற்சாகமான சவால்களைத் தொடர்ந்து ULTIMATE 18 இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் பட்டத்திற்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 18 இறுதிப் போட்டியாளர்களும், இந்தியாவின் மதிப்பிற்குரிய பந்தய மற்றும் பயிற்சி அகாடமியான RACR இலிருந்து இந்திய பந்தய ஜாம்பவான் ரஜினி கிருஷ்ணன் தலைமையில் கோயம்புத்தூரில் உள்ள சின்னமான காரி மோட்டார் ஸ்பீட்வேயில் மேம்பட்ட பயிற்சியைப் பெற்றனர். கடுமையான தொழில்முறை பயிற்சியுடன், இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரின் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க, FMSCI இன் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச மோட்டோ பந்தய சாம்பியன்ஷிப்பின் தரநிலைகளின்படி இறுதி ரெவ்-அப்பந்தயம் நடத்தப்பட்டது.

Castrol காஸ்ட்ரோல் இந்தியா லிமிடெட்டின் துணைத் தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் திரு. ரோஹித் தல்வார் அவர்கள், “இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் ஒரு அற்புதமான வெற்றியாகும், இது பைக் ஆர்வலர்களுக்கு நிபுணத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த இளம் ரைடர்ஸ் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஐரோப்பாவில் உள்ள Castrol Honda LCR MotoGP™️ குழுவுடன் பயிற்சி பெறும் அபாரமான வாய்ப்பை இப்போது பெற்றுள்ள எங்கள் வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *