General

வெள்ள நிவாரணம் இவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், யாருக்கெல்லாம் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது;

சென்னையில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதால் சென்னையை பொறுத்தவரை அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று கிராமங்கள்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் வசிக்கும் மக்களுக்கு முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் மூன்று கிராமங்கள்,

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 6000 ரூபாய் நிவாரணம் பெற முடியும்.

மேலும், மத்திய மாநில அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பு விவரத்துடன் வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பித்தால், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண அரசாணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *