FINANCE

க்ரோமா ‘ஹேப்பி 500 டு யூ’ பிரச்சாரத்தின் மூலம் சென்னையில் தனது 500-வது விற்பனை நிலையத்தை தொடங்கியிருக்கிறது!

  • இந்தியாவில் 500 விற்பனை நிலையங்கள் என்ற மிகப்பெரும் மைல்கல்லை எட்டியிருக்கிறது க்ரோமா. இதைக் கொண்டாடும் வகையில் ‘ஹேப்பி 500 டு யூ’ என்ற பிரச்சாரத்தை உற்சாகத்துடன் ஆரம்பித்திருக்கிறது.
  • க்ரோமாவில் உங்களுக்கு விருப்பமான தயாரிப்புகளை வாங்கும் போது, ‘H500TU’ என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தி, வரம்பற்ற 10% தள்ளுபடியை பெற்று பயன் பெறுங்கள்.

சென்னை, ஜூன் 20, 2024: க்ரோமா நிறுவனத்தின் துரிதமான வளர்ச்சி மற்றும் அசத்தலான விரிவாக்கப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சென்னையில் தனது 500-வது விற்பனை நிலையத்தை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. ‘ஹேப்பி 500 டு யூ’ [‘Happy 500 To You’] என்னும் பிரச்சாரத்தின் அறிமுகத்துடன் புதிய விற்பனை நிலைய ஆரம்பம் கொண்டாடப்படுகிறது. காட்டுப்பாக்கம், 3/280, பூந்தமல்லி ஹை ரோடு, குமணஞ்சாவடி [Kattupakkam, 3/280, Poonamallee High Road, Kumananchavadi] என்ற முகவரியில், இந்த 500-வது விற்பனை நிலையம் செயல்படும். இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஈடுஇணையற்ற வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்க வேண்டுமென க்ரோமா கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கம் அமைந்திருக்கிறது.

இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில், க்ரோமா தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பிரத்தியேகமான விளம்பரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம். ஜூன் 19 முதல் ஜூன் 23 வரை, க்ரோமா விற்பனை நிலையங்களிலும், www.cromo.com என்ற க்ரோமாவின் வர்த்தக இணையதளம் மூலமாகவும், டாடா நியூ [Tata Neu] வாயிலாகவும் தங்களுக்கு விருப்பமான தயாரிப்புகளை வாங்கும் க்ரோமா வாடிக்கையாளர்கள் ‘H500TU’ என்ற கூப்பன் குறியீட்டை பயன்படுத்தி 10% தள்ளுபடி சலுகையைப் பெற்று பயனடையலாம். குறிப்பிட்ட காலம் மட்டுமே வழங்கப்படும் இந்த சலுகையானது, க்ரோமா மீது வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், காட்டி வரும் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் க்ரோமாவின் பாணியில் அமைந்திருக்கிறது. க்ரோமாவின் மைல்கல் சாதனையைக் கொண்டாடுவதால், இந்த கொண்டாட்ட சலுகையை வாடிக்கையாளர்கள் க்ரோமா விற்பனை நிலையங்கள், www.cromo.com மற்றும் Tata Neu உட்பட அனைத்து விற்பனை தளங்களிலும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இல்லாமல் எளிதில் பயன்படுத்த முடியும். இதனால் ‘H500TU’ என்ற பிரச்சாரம் இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்ஃபினிட்டி ரீடெய்ல் லிமிடெட் [க்ரோமா]-ன் துணை தலைமை செயல் அதிகாரி திரு ஷிபாஷிஷ் ராய் [Mr. Shibashish Roy, Deputy CEO of Infiniti Retail Ltd (Croma)] இந்த மாபெரும் மைல்கல்லைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “எங்களது 500-வது விற்பனை நிலையத்தைத் திறப்பது என்பது மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. காரணம் எங்களது வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய உறவை தொடர்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் இம்முயற்சி அமைந்திருக்கிறது. இவ்வளவு பெரிய கலாசார பாரம்பரியம் கொண்ட சென்னையில் எங்களது 500-வது விற்பனை நிலையத்தைத் திறப்பதில் இதை விட அதிக உற்சாகம் இருக்க முடியாது. இதன் மூலம், நாங்கள் இப்போது இந்தியா முழுவதிலும் எங்களது செயல்பாடுகளை விரிவுப்படுத்தியுள்ளோம். மேலும் எங்களின் விற்பனை நிலையங்களின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, நாடு முழுவதும் உள்ள பல மக்களுக்கு கேஜெட்களை எளித்ல் கிடைக்கச் செய்வோம்’’ என்றார்.

புதிய சென்னை விற்பனை நிலையம் அதிநவீனமயமாக கட்டப்பட்டுள்ளது, 550+ ப்ராண்ட்களின் 16,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டு உபகரணங்கள் உட்பட உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அனைத்தையும் இந்தக் விற்பனை நிலையத்தில் வாங்க முடியும். க்ரோமாவின் புகழ்பெற்ற அதே அசத்தலான ஷாப்பிங் அனுபவம், வாடிக்கையாளர்களின் தேவைஅக்ளை அறிந்து அதற்கேற்ற தயாரிப்புகளுக்கு வழிகாட்டும் ஊழியர்கள் மற்றும் ஒரு முழுமையான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு ஆகிய அம்சங்களை வாடிக்கையாளர்கள் இந்த புதிய விற்பனை நிலையத்திலும் எதிர்பார்க்கலாம்.

காட்டுப்பாக்கத்தில் உள்ள புதிய க்ரோமா விற்பனை நிலையம் வாரத்தின் 7 நாட்களும் காலை 11:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *