கைவினை கலைஞர்கள் உருவாக்கிய 111 அடி நீள சைக்கிள் பியூர் அகர்பத்தி
இந்தியாவின் மிகப்பெரிய அகர்பத்தி தயாரிப்பு நிறுவனமான சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனம், உள்ளூர் கைவினை கலைஞர்களை கொண்டு 111 அடி நீளத்திற்கு மிகப்பெரிய அகற்பத்தியை தயாரித்துள்ளது.
கைவினை கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
23 நாட்களாக 18 கைவினை கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்த மிகப்பெரிய அகற்பத்தியை தயாரித்துள்ளனர்.
தேன், கொன்னேரி கெடே, நெய், சந்தன மர தூள், குகூளா, அகரு, சாம்பிரானி, தேவதாரு, லோபன் மற்றும் வெள்ளை கடுகு ஆகியவற்றோடு கரி, ஜிக்காட் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை கொண்டு இந்த அகர்பத்தி தயாரிக்கப்பட்டது.
கர்நாடக, மஹாராஷ்டிரா, கோவா ஆகிய இடங்களில் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த அகர்பத்தி ஏற்றப்பட உள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜின் தாயார் சரஸ்வதி ஏற்றி வைத்தார்.
அப்போது மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா, கிருஷ்ணராஜா எம்எல்ஏ டி.எஸ்.ஸ்ரீவத்ஸா மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி தொடர்பாக சரஸ்வதி கூறுகையில், எங்கள் குடும்பத்தின் பல தலைமுறைகள் கலைக்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர்.
எங்களது பணியை அங்கிகரிக்கும், ஆதரிக்கும் விதமாக சைக்கிள் பியூர் அகர்பத்தி முன்வந்து செயல்பட்டுள்ளது எங்களுக்கு உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது.
இதை ஒரு சாதாரண கவுரவம் என்று கருதி கடந்து சென்று விட முடியாது; எங்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஆனால், அனைத்து கைவினை கலைஞர்களின் சமூகத்திற்குமான ஒருபெரும் கவரவத்தையும் உறுதிபாட்டையும் இது குறிக்கிறது.
நமது கலாசாரத்திற்கு பங்களிப்பு ஆற்றும் கைவினை கலைஞர்களுக்கு, குறிப்பாக நமது பகுதியின் மைசூரு கைவினை கலைஞர்களுக்கு இது ஒரு பெரும் ஊக்குவிப்பாகும். அவர்களது படைப்புத்திறன் இன்னும் பன்மடங்கு பெருக வழி செய்யும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
NR குழும தலைவர் குரு பேசுகையில், தெய்வ வழிப்பாட்டில் பயன்பாட்டுக்குரிய ஒரு பிராண்டாக திகழும் சைக்கிள் பிராண்டு நிறுவனம் கைவினை கலைஞர் சமூகத்தை ஆதரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மக்களின் வாழ்வில் ஒரு நம்பிக்கைக்கு உரிய ஆதாரமாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். இந்த 111-அடி உயர அகர்பத்தி அந்த உறுதிப்பாட்டை நினைவூட்ட பயன்படும். கைவினை கலைஞர்களின் உலகில் மகிழ்ச்சி மணம் பரப்பும் என்று தெரிவித்தார்.