குடும்பத்தாருடன் வாக்களித்த எடப்பாடி பழனிச்சாமி
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவில் தனது குடும்பத்தாருடன் வாக்குப்பதிவு செய்தார் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக-வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் சென்று வாக்களித்தார்.
