தமிழ் செய்திகள்

அகமுடையார் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அகமுடையார் சமூகத்தை சேர்ந்த சுமார் 275 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் இராவணன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜரத்தினம், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வனிதா, வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் செந்தில்வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் குரூப் 4, ஆர்.ஆர்.பி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்,
அதனைதொடர்ந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினர்.

நிகழ்ச்சியில் இராவணன் பேசுகையில், 1958-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த சங்கம், அகமுடையார் சமூக குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றிடும் நோக்கில் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு 275 மாணவர்களுக்கு அறக்கட்டளை மற்றும் நன்கொடை மூலமாக வசூல் செய்து ரூபாய் 12 லட்சம் அளவில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இது மேலும் விரிவுபடுத்தப்படும்.

அதேபோல் அகமுடையார் சமூக மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறக்கட்டளைக்கு சொந்தமான செங்குன்றத்தில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் ரோபோட்டிக் அல்லது செமி கன்டக்டர் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பயிற்சி வழங்க உள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில், அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளை செயலாளர் ரமேஷ்குமார், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் சரவணன், அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை அன்பழகன், அகம் கல்வி அறக்கட்டளை பொருளாளர்கள் தயாநிதி, வில்வகுமார், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க பொருளாளர் கணேசன், அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் குமார், செல்வி சுப்பிரமணியன், மோகனபிரியா, கணேசன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், அறங்காவலர்கள், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம், அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *