மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்
மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மான்சுக் மான்டாவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாய்வு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இதில், அலுவல் காரணமாக கோவை மாவட்டத்தில் இருந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.