FINANCE

மோடி தலைமையில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி பெறும்; அமித்ஷா உறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் ‘அதிர்வுமிக்க குஜராத் உச்சிமாநாட்டின்’ ( Vibrant Gujarat Global Summit ) நிறைவு விழாவில் உரையாற்றினார்.

அப்போது, ‘மோடி மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து, உலகின் முன் பெருமையுடன் நிற்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கணவனை ‘அதிர்வுமிக்க குஜராத்’ என்ற தொலைநோக்கு பார்வையின் விளைவை நாம் இன்று காண்கிறோம்.

தன்னம்பிக்கை மற்றும் முழு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் ‘அதிர்வுமிக்க குஜராத் உச்சிமாநாட்டின்’ பங்கு முக்கியமானது.

உலகம் முழுவதிலும் உற்பத்தி மற்றும் முதலீட்டுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இந்தியா மாறியுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமை மற்றும் அமித்ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், ‘அதிர்வுமிக்க குஜராத் உச்சிமாநாடு’, திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தளத்தை உருவாக்குவதன் மூலம் முதலீட்டைக் கொண்டு வர உழைத்துள்ளர்.

இது முழு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கிறது. இதன் விளைவாக, நாட்டின் பல மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்காக இந்த மாதிரியை ஏற்றுக்கொண்டுள்ளன.

இன்று உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு குஜராத்தில் முதலீடு செய்கிறார்கள்.

மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற போது இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் 11வது இடத்தில் இருந்தது என்பதும், இன்று பத்தாண்டுகளுக்குள், உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

வரும் காலங்களில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது.

பிரதமர் மோடி 2024-ல் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பது உறுதி என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

Vibrant Gujarat Global Summit 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *