பாமக பொருளாளர் திலகபாமா நூல் வெளியீட்டு விழா – சென்னை
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் பாமக பொருளாளரும் கவிஞருமான திலகபாமாவின் “இப்படிக்கு திலகபாமா” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. செய்தி அலை பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை மூத்த பத்திரிகையாளர் மாலன் வெளியிட, சாணக்யா யூடியூப் சேனல் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜ் பாண்டே பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய திலகபாமா, அரசியல் மற்றும் இலக்கியம் இரண்டும் தனக்கு பிரிக்க முடியாதவை என்றும், 2006 முதல் பொதுநலன் சார்ந்த தனது கருத்துக்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். சமூக மாற்றம், சாதி ஒழிப்பு, அரசியல் செயல்பாடு மற்றும் இலக்கியத்தின் பங்கு குறித்து தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தார்.
இலவச திட்டங்கள், கல்வி அமைப்பு, சமூக அக்கறை மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து விமர்சனங்களையும் முன்வைத்த அவர், சொற்கள் சமூக மாற்றத்திற்கான வினையாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து எழுதிவருவதாக கூறினார். சமூக வரலாற்றையும் போராட்டங்களையும் பதிவு செய்வதே தனது எழுத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

