General

சிறந்த ஊழியர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்லும் காவேரி மருத்துவமனை

சென்னையில் பிரபல மருத்துவமனையான காவேரி மருத்துவமனை சிறந்த முறையில் பணியாற்றும் தங்களது ஊழியர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்கிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் காவேரி மருத்துவமனை தங்களது ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக “பிளையிங் ஏஞ்செல்ஸ்” (flying angels) என்னும் திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, தங்களது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டு தோறும் கௌரவித்து வருகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிளையிங் ஏஞ்செல்ஸ் என்னும் திட்டத்தின் மூலம் பிரசித்த பெற்ற சுற்றுலா தளங்களுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

ஊழியர்களின் விமான கட்டணம், சுற்றுலா செல்லும் இடங்களில் தங்குவதற்கான வசதி, உணவு, வாகன போக்குவரத்து வசதி போன்ற அனைத்து செலவினங்களையும் மருத்துவமனை நிர்வாகம் பார்த்துக்கொள்கிறது.

இந்த சுற்றுலாவில் கலந்துகொள்பவர்கள் தங்களது மேலதிகாரிகளிடம் சகஜமாக பழகும் வாய்ப்பு கிடைப்பதோடு, பல்வேறு கேளிக்கை விளையாட்டுகளில் கலந்துகொண்டு மன மகிழ்ச்சியடைகின்றனர்.

மருத்துவமனையில் எப்போதும் பரபரப்பான சூழ்நிலையில் பணியாற்றி கொண்டிருக்கும் நிலையில், அனைத்து பணிகளையும் மறந்துவிட்டு முதன்முறையாக விமானத்தில் பயணித்தது மகிழ்ச்சியளித்ததாகவும், காவேரி மருத்துவமனையின் மற்ற கிளைகளில் பணியாற்றிவரும் ஊழியர்களுடன் சுற்றுலா சென்றது தங்களது வாழ்நாளில் மறக்க முறியாத நினைவுகளை கொடுத்ததாக ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *