தமிழ் செய்திகள்

கிங்மேக்கர்ஸ் வேலம்மாள் கார்டன் வீட்டு மனைகள் அறிமுகம்

சென்னை: கிங்மேக்கர் ரியல்எஸ்டேட் நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளாக 96,800 மகிழ்ச்சிகரமான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெற்ற நிறுவனமாகும். தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகளை விற்பனை செய்து வந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னையின் நுழைவாயிலாக விளங்க கூடிய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள படப்பையில் அமைந்துள்ள 100 ஏக்கர் பரப்பளவில் வேலம்மாள் கார்டன் வீட்டுமனை பிரிவின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிங் மேக்கர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் இதுகுறித்து தெரிவித்ததாவது :-

” கடந்த 19 ஆண்டுகளாக 96,800 மகிழ்ச்சிகரமான வாடிக்கையாளர்களை கொண்ட கிங்மேக்கர் ரியல் எஸ்டேட் நிறுவனம் கிளாம்பாக்கத்திலிருந்து 8-கி.மீ தொலைவில் படப்பையில் 100 ஏக்கரில் வேலம்மாள் கார்டன் என்ற பெயரில் வீட்டுமனைப்பிரிவுகளை விற்பனைக்கான துவக்கவிழா இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனையொட்டி சலுகை விலையாக ஒரு சதுர அடியின் விலை ரூ.2999 /- என நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. அதுவே வீட்டுமனை விற்பனை தொடங்கும் நாளன்று ரூ.3500 /- ஆக உயரும் , முறையே 100வது வீட்டுமனை பிரிவு விற்பனைக்கு பின் ஒரு சதுர அடியின் விலை ரூ. 3999/- ஆக நிர்ணயிக்கப்படும்.

இந்த வேலம்மாள் கார்டனில் முதலீடு செய்யும் முதல் 100 வாடிக்கையாளர்களின் முதலீடு 20% முதல் 30% வரை உடனடியாக உயரும். வேலம்மாள் கார்டனில் முதல்கட்டமாக 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்புகளும், 10 ஏக்கரில் வில்லா அமைப்பில் தனி வீடுகளும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சாலை வசதி, குடிநீர் வசதி, பூங்கா, மின்விளக்கு, பசுமை திட்ட மியாவாக்கி காடுகள் என இங்கு 42 வகையான அடிப்படை வசதிகள் (Amenities) செய்யப்பட்டுள்ளது. மேலும் படப்பை, ஒரகடம் ஆகிய பகுதிகள் மோட்டார் வாகன தயாரிப்புகளின் மையமாக விளங்கிவருகிறது .

மக்களின் அடிப்படை தேவைகள், பள்ளிக் கல்லூரிகள் இந்த வீட்டுமனைப்பிரிவுகள் மிக அருகாமையில் அமைந்துள்ளன. ஆகவே எதிர்காலத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையமாக வைத்து சுற்றுப்புற பகுதிகள் வளர்ச்சியடைந்தது போன்று பட்டப்பை பகுதியும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில் இருப்பதால் உடனடி வளர்ச்சி அடையும். இன்று முதலீடு செய்வோருக்கு ஒரு நம்பிக்கையான இடமாக வேலம்மாள் கார்டன் விளங்கும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *