சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரியில் LG எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக வாஷிங்மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன
சென்னை, 9 ஆகஸ்ட் 2024: சென்னை செம்மஞ்சேரியில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக LG எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4 தானியங்கி முறையில் இயங்கும் பிரத்யேக வாஷிங்மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன.
LG நிறுவனத்தின் இந்த பிரத்யேக வாஷிங்மெஷின்கள் ஏற்கனவே கால்கோடியஸ் கல்லூரி, கால்கோடியஸ் பல்கலைக்கழகம், BITSOM , NIT கோவா போன்ற கல்வி நிறுவனங்களில் வெற்றிகரமாக நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தனது சேவையை வெற்றிகரமாக செயின்ட் ஜோசப் கல்லூரியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சுய சலவை வசதி மூலம் சுமார் 750 மாணவர்கள் பயன்பெறுவர். LG லாண்ட்ரி க்ரூ ஆப் மூலம் இந்த வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்தலாம், இயந்திரங்களை சலவைக்காக முன்பதிவு செய்வது முதல், துணிகளை சலவை செய்வது தொடர்பான நிகழ்கால அப்டேட்களை இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
“எங்கள் குறிக்கோள் மாணவர்களுக்கு நடைமுறையான மற்றும் புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருவதும், அவர்களின் நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவுவதும் ஆகும்” என்று LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் மேலாண் இயக்குனர் ஹாங் ஜூ ஜியோன் கூறினார்.