சென்னை எல்ஐசி அலுவலகத்தில் 76-வது குடியரசு தின கொண்டாட்டம்
சென்னை: சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி-யின் தென்மண்டல அலுவலகத்தில் நாட்டின் 76 வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
எல்.ஐ.சி.யின் தென்மண்டல மேலாளர் ஜி வெங்கடரமணன் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
குடியரசு தின வாழ்த்து தெரிவித்த மண்டல மேலாளர் நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு எல்.ஐ.சி.யின் இன்றிமையாத பங்கினை நினைவு கூர்ந்தார்.
எல்.ஐ.சி.பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.