தமிழ் செய்திகள்

ஆவடியில் ரெயின்போ கார்டன் வீட்டுமனை டவுன்ஷிப் முன்னாள் நீதிபதி வள்ளிநாயம் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை அடுத்த ஆவடி அயல்சேரியில் மெட்ராஸ் சிட்டி புரொமோட்டர்ஸ் டாட் காம் (Madras City Properties.Com) நிறுவனத்தின் புதிய வீட்டுமனை டவுன்ஷிப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‌இதற்கு ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், மெட்ராஸ் சிட்டி புரொமோட்டர்ஸ் டாட் காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மனை பிரிவினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

Google Map Site Location: https://maps.app.goo.gl/MpBYwgqv3nCy2K1y7

இந்த புதிய மனைபிரிவின் சிறப்பு அம்சங்கள் பற்றி நீதிபதி வள்ளிநாயகம் கூறுகையில், இவ்விடத்தில் பனை மரங்களை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது, இங்கு மனை வாங்குபவர்களுக்கு பனை மரத்தின் நன்மைகள் புரிய வரும். இது பசுமை நிறைந்த இடமாக இருப்பது மனதிற்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்று கூறினார்.

நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் பேசுகையில், இது எங்களுடைய 150-வது துவக்கவிழா நிகழ்ச்சியாகும். சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மனைப்பிரிவு அமைந்துள்ளது. 120 வீட்டு மனைகள் 700 சதுர அடிமுதல் 2000 சதுர அடி வரை விற்பனை செய்யப்படும். மனையின் விலை ரூ.28 லட்சம் முதல் தனி வீட்டின் விலை ரூ.48 லட்சம் ரூபாய் என்றார்.

வங்கி மூலம் 80% கடன் பெற நாங்கள் வழிவகை செய்து தருவோம். வங்கி மூலம் கடன் பெற முடியாதவர்களுக்கு 50% முன்பணம் கொடுத்து மனையை பதிவு செய்து கொண்டு 7 ஆண்டுக்குள் மீதி பணத்தை தவணை முறையில் கட்ட வாடிக்கையாளர்களுக்கு வசதி ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல் இங்கு இடம் வாங்கி வீடு கட்ட நினைப்பவர்களுக்கு வசதியாக சுமார் ரூ.13 லட்சம் என்ற குறைந்த செலவில் நாங்களே வீடு கட்டித் தருவோம்.

எங்கள் நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக 150 இடங்களில் இது போன்ற இடங்களை விற்பனை செய்துள்ளது. இதுவரை எங்களிடம் 4000 வாடிக்கையாளர்கள் மனை வாங்கியுள்ளனர். மனையின் சிறப்பு அம்சமாக ருகில் பட்டாபிராம் டைடல் பார்க் உள்ளதால் வேலை வாய்ப்பு குறையில்லாமல் இருக்கும். மனையிலிருந்து ஆவடி பூந்தமல்லி பட்டாபிராம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.

மனையிலிருந்து ஆவடி இந்துக்கல்லூரி ரயில் நிலையமும் மேலும் பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. மேலும், மக்கள் வாழ இவ்விடம் சிறந்து விளங்கும் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அமைப்பு மாநிலத் தலைவர் விக்ரம ராஜா, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *