மாருதி சுஸுகி ஆல்டோ K10 (VXi) மற்றும் S-Presso (LXi) கார்களுக்கு அற்புதமான சலுகைகள்
அதிக சேமிப்பு, ஆல்டோ K10 (VXi) காருக்கு ரூ. 12,774/-மற்றும் S- Presso Lxi
காருக்கு ரூ. 7,609/-
கார் வாங்குபவர்களுக்கு பண்டிகை காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற, மாருதி சுஸுகி விலையை குறைத்துள்ளது ஆல்டோ K10 (VXi) காருக்கு ரூ. 6,500/- தள்ளுபடி மற்றும் S-Presso (LXi) காருக்கு ரூ. 2,000 தள்ளுபடி (எக்ஸ் ஷோரூம் விலையிலிருந்து).
இந்த விலைக் குறைப்பு இரண்டு மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ. 5 லட்சத்திற்கும் குறைந்த வரம்பிற்குள் கொண்டு வருகிறது, இது கர்நாடகாவில் குறைந்த சாலை வரி வரம்புக்கு வழிவகுத்தது.
மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் -இன் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக அதிகாரி திரு.பார்த்தோ பானர்ஜி, “எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மங்களகரமான பண்டிகை காலத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். விழாக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில், எங்களது ஆல்டோ K10 (VXi) மற்றும் S-Presso (LXi) மாடல்களின் விலைகளை குறைத்துள்ளோம்.
இந்த விலைக் குறைப்புக்கள் கர்நாடகாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாலை வரி ஸ்லாப் களைக் குறைப்பதன் மூலம் கூடுதல் பலன்களைக் கொண்டுவரும், மேலும் அவர்களுக்கு கூடுதல் சேமிப்புகளை வழங்கும். இந்த கூடுதல் பலன், இந்த பண்டிகைக் காலத்தை கூடுதல் சிறப்புறச் செய்யும் வகையில், சிறிய கார் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.”
தமிழ்நாட்டில், எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான கார்களுக்கு 12% சாலை வரி விதிக்கப்படுகிறது, மேலும் ரூ. 5 லட்சத்திற்கும் அதிக விலை கொண்ட வாகனங்களுக்கு 13% சாலை வரி விதிக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு இரண்டு மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ. 5 லட்சத்திற்கும் குறைந்த வரம்பிற்குள் கொண்டு வருகிறது குறைந்த சாலை வரியின் கூடுதல் நன்மையாக ஆல்டோ K10 (VXi) காருக்கு ரூ. 5840/- மற்றும் S-Presso (LXi) காருக்கு ரூ. 5,255/- கிடைக்கும்.
விலைக் குறைப்பு மற்றும் சாலை வரி ஸ்லாப்பில் மாற்றம் ஆகியவற்றின் கூட்டுப் பயன் என்னவென்றால், கார் வாங்குபவர்கள் ஆல்டோ K10 (VXi) -இல் ரூ. 12,340/- மற்றும் ரூ. 7,255/ S- Presso (LXi) -இல் பெறுகிறார்கள்.