மதுரைக்கு வருகிறது மெக்டொனால்ட்ஸ் இந்தியா
தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரில் அறிமுகமாகிறது கோல்டன் ஆர்ச்சஸ் நிறுவனம்.
சென்னை: தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரான மதுரையில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கியுள்ளது மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு). எதிர்கால அனுபவத்தைத் தரும் (EOTF) இந்தப் புதிய கடை, வியூக முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வேலம்மாள் சாலையில் அமைந்துள்ளது.
மெக்டொனால்ட்ஸ் பிரத்யேக அனுபவத்தை இது மதுரைவாசிகளுக்கு வழங்கும். இந்த உணவகத்துடன், தற்போது தமிழ்நாட்டில் 38 மெக்டொனால்ட்ஸ் இந்தியா உணவகங்கள் உள்ளன. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், அதன் விஷன் 2027 உத்தியின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களில் முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.
பல நிலைகளைக் கொண்ட இந்தப் புதிய மதுரை உணவகம் சுயமாக ஆர்டர் செய்யும் கியோஸ்க்குகள் (SOK), டிஜிட்டல் மெனு போர்டுகள், டேபிள் சேவை, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. மெக்டொனால்ட்ஸ் கிளாசிக் பர்கர்கள், மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன், மெக்ஸ்பைசி சிக்கன் விங்ஸ் உள்ளிட்ட விரிவான ஃபிரைடு சிக்கன் வகைகள், மெக்டொனால்ட்ஸ் குளிர்பானங்களுடன் கூடிய விரிவான மெனுவை இந்த உணவகம் வழங்குகிறது. இந்த வகைகளைத் தாண்டி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்கான கொரிய உணவு வகைகள், ஃப்ரைஸ், டெசர்ட்ஸ் போன்ற கிளாசிக் விருப்ப உணவுகளையும் வாடிக்கையாளர்கள் சுவைக்க முடியும். குடும்பங்களின் மறக்கமுடியாத கொண்டாட்டங்களை நடத்தக்கூடிய வகையில் இந்தக் கடையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிறந்தநாள் விழாவுக்கான தனிப் பகுதியும் உள்ளது.

மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் போன்ற புதுமையான உணவு வகைகள் மூலம் தென்னிந்திய சந்தையில் தனது இருப்பை பலப்படுத்தவும், தன் சந்தைப் பங்கை மேலும் வலுப்படுத்துவதையும் மெக்டொனால்ட்ஸ் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. மெக்டொனால்ட்ஸ் இந்தியாவின் சிக்கன் வகைகள், பிராந்திய விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது, தென்னிந்தியாவில் தங்கள் தயாரிப்பு வரிசையை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மெக்டொனால்ட்ஸ் இந்தியாவின் (W&S) நிர்வாக இயக்குநர் சௌரப் கல்ரா கூறுகையில், “மெக்டொனால்ட்ஸ் அனுபவத்தை மதுரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் கடைகளை தென்னிந்தியா முழுவதும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த அறிமுகம் எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. மெக்டொனால்ட்ஸ் தரும் மகிழ்ச்சி, வசதிகளை மேலும் மேலும் சமூகங்களுக்கு கொண்டுசெல்லும் எங்கள் உத்தியில் கவனம் செலுத்துகிறோம். பல தசாப்தங்களாக மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை உலகளவில் வரையறுத்துள்ள நிலையான தரம் மற்றும் சேவையை நண்பர்கள்-குடும்பங்கள் ஒன்றுகூடவும், சிறப்பு தருணங்களைக் கொண்டாடவும் அனுபவிக்கவும்கூடிய இடங்களை மேலும் மேலும் உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உங்களுக்குப் பிடித்த மெக்டொனால்ட்ஸ் இப்போது மிக அருகில் வந்துவிட்டது. உண்மையான மெக்டொனால்ட்ஸ் அனுபவத்தை மதுரை மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது” என்றார்.
எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் வெஸ்ட்லைஃப் ஃபுட்வேர்ல்ட் 2027ஆம் ஆண்டுக்குள் 580 முதல் 630 உணவகங்களை திறக்க இலக்கு வைத்துள்ளது. வளர்ந்து வரும் தென்னிதிய சந்தையை இந்த நிறுவனம் வியூகரீதியாக இலக்காகக் கொண்டுள்ளது. அதன் விஷன் 2027 உடன் இணைந்து, தன் புதிய உணவகங்களில் சுமார் 60% தென்னிந்தியாவிற்கு ஒதுக்க வெஸ்ட்லைஃப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு கிளையும் 2027ஆம் ஆண்டுக்குள் மெக்கஃபே உடன், அதிநவீன எதிர்கால அனுபவத்தைத் (EOTF) தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

மெக்டொனால்ட்ஸ் இந்தியா (W&S) 67 நகரங்களில் 421 உணவகங்களை நடத்திவருகிறது, தென்னிந்தியாவில் 184 உணவகங்களுடன் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டில், தென்னிந்தியாவில் 27 உணவகங்களைத் திறப்பதன் மூலம் தன் நிலையை மெக்டொனால்ட்ஸ் இந்தியா வலுப்படுத்தியது, இதில் தமிழ்நாட்டில் எட்டு உணவகங்களும் அடங்கும்.
பல்வேறுபட்ட சந்தைகளில் மெக்டொனால்ட்ஸ் சுவையை அதிக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த வளர்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சரியான சந்தைகள், சரியான ரியல் எஸ்டேட், சரியான திறன்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்புடன் வெஸ்ட்லைஃப்பின் விரிவாக்க உத்தி மேற்கொள்ளப்படுகிறது.
அனைவருக்கும் சுவையான உணவு-நல்ல தருணங்களை எளிதாகத் தருவதற்கான தன் நோக்கத்தில் மெக்டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனம் உறுதியாக உள்ளது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மெனு உணவு வகைகளில் செயற்கை வண்ணங்கள், செயற்கை சுவைகள், செயற்கை பதப்படுத்திகள், சிக்கனில் MSG சேர்க்கப்படுவது போன்றவை இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் ‘ரியல் ஃபுட் ரியல் குட்’இல் இந்த நிறுவனம் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, உள்ளூரில் சேகரிக்கப்பட்ட புதிய பொருட்களை உலகளவில் புகழ்பெற்ற சப்ளையர்களிடம் பெறுவதில் தொடங்கி, தன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கும் மெக்டொனால்ட்ஸ் இந்தியா உறுதிபூண்டுள்ளது.