டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆன்லைன் கல்வி குறித்த விழிப்புணர்வு எக்ஸ்போ
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் இளநிலை, முதுநிலை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அக்கல்வி நிறுவனத்தின் சார்பாக சென்னை கோயம்பேடு அருகே உள்ள பி.வி.ஆர் வணிக வளாகம், அமைந்தகரையில் உள்ள ஸ்கை ஒன், ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு போன்ற இடங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு எக்ஸ்போ நடைபெற்று வருகிறது.
ஜனவரி 31 ஆம் தேதி வரை மேற்கண்ட மூன்று இடங்களில் இந்த எக்ஸ்போ நடைபெறும்.
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.
படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வெளிநாடு, கடல் சார்ந்த துறை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே இந்த கல்வியை தொடர்ந்து படிக்கலாம்.
விழிப்புணர்வு எக்ஸ்போவில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை நிறுவனத்தின் தலைவர் அருண்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் ஆன்லைனில் வழங்கப்படும் படிப்புகள் குறித்தும், அதில் எவ்வாறு சேருவது, கல்வி கட்டணம், கால அளவு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உடன் பழனிவேல், இணை பதிவாளர்கள் காளிதாசன், மாலினி பாண்டே, இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.