தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஒன்றிய அரசு அமைய வாக்களிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மறுநாள் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள உள்ளது.
கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தமிழக வாக்காளர்களுக்கு பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 19-ஆம் தேதி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள்.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையில் வாக்காளர்கள் வாக்கு செலுத்த வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் நாள்.
இந்தியாவின் அரசியல் சட்டத்தை காப்பற்ற நடக்கும் தேர்தல். மதம், சாதி கடந்து மக்கள் ஒற்றுமையா வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம்.
மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய், பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என்பன போன்ற பல நல்ல திட்டங்களை திமுக அரசு செய்லபடுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் எதிரொலிக்கவும், தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக-வை வீழ்த்தவும், தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.