நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியையொட்டி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் புகழ்பெற்ற நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது.
அனுமனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பக்தர்களின் கூட்டம் அதிகப்படியாக இருப்பதால் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.