General

நிப்பான் பெயிண்ட்ஸ் கட்டட வடிவமைப்பாளர்களுக்கான தேசிய அளவிலான போட்டியின் விருது வழங்கும் விழா

நிப்பான் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் கட்டட வடிவமைப்பாளர்களுக்கான தேசிய அளவிலான போட்டியின் விருது வழங்கும் விழா சென்னை மணப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது.

நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ஆண்டுதோறும் AYDA (Asia’s Young Designers Award) என்னும் போட்டியை ஆசியாவில் 21 நாடுகளில் நடத்தி வருகிறது.

அதன்படி சர்வதேச போட்டியில் 17 ஆவது முறையாகவும், இந்தியாவில் 9 ஆவது முறையாகவும் இந்த போட்டி நடைபெற்றது.

படித்துவிட்டு பணிக்கு வரும் இளைஞர்களின் கற்பனை திறனை வெளிக்கொணரும் விதமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் வெள்ளி மற்றும் தங்கம் வெல்பவர்கள் சர்வதேச அளவில் நடத்தப்படும் இறுதி போட்டியில் கலந்துகொள்வர்.

சர்வதேச போட்டியில் தங்கம் வெல்பவர் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் 2 வாரங்களுக்கு பயிற்சி பெற நிப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டு கட்டட வடிவமைப்பாளர்களுடன் தங்களது கற்பனை திறனை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த 17 ஆண்டுகளில் இந்த போட்டியில் 21 நாடுகளில் சுமார் 1600 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவர்கள் பதிவு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை இந்தாண்டு சுமார் 2000 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், அவர்களில் 840 மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். அவர்களில் 24 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பையை சேர்ந்த சூரஜ், பெங்களூருவை சேர்ந்த எரோமிதா ரமேஷ் ஆகியோர் தங்கம் வென்றனர்.

அதேபோல் பெங்களூருவை சேர்ந்த அக்ருதி ஷா, மும்பையை சேர்ந்த ஷ்ரேயன்ஸ் இட்டாலிய ஆகியோர் வெள்ளி வென்றனர்.

இந்தியாவில் தங்கம் வென்ற இரண்டு மாணவர்களும் சர்வதேச அளவில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று நிப்பான் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் அலங்கார பிரிவின் தலைவர் மகேஷ் ஆனந்த் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *