General

குமாரி நிருத்ருதி-யின் அழகுமிகு சலங்கை பூஜை

சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் நாட்யநிருத் அகாடமியின் கலை இயக்குநர் மிருணாளினி தியாகராஜனின் மகளும், சிஷ்யையுமான குமாரி நிருத்ருதி-யின் சலங்கை பூஜை சென்னையில் நடைபெற்றது.

குமாரி நிருத்ருதி சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மூன்று வயதிலிருந்தே பாரம்பரியமிக்க வழுவூர் பாணியில் நடனம் கற்று வரும் இவர், பரதநாட்டியத் துறையில் கலைஞராக வேண்டும் என்கிற தனது கனவுகளை அடைய கடினமாக உழைத்து வருகிறார்.

அதற்கேற்றோர்போல், அவர் பல்வேறு சபாக்களிலும் கோயில்களிலும் நடந்த பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தொடங்கி தனது தனிதிறமையை வெளிப்படுத்திவருகிறார்.

கடந்த ஜனவரி 6 – ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்ஜனி சபாவின் ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி அரங்கில் ஷண்மதம் என்ற கருப்பொருளில் தனது சலங்கை பூஜையை முழு மார்க்கமாக நடனமாடி பரதத்தில் தனது முதல் தனி திறனை வெளிப்படுத்தினார்.

குரு மிருணாளினி நடன அமைப்பும், நட்டு வாங்கமும், அவருக்கு குரலில் ரோஷினி கணேசன், மிருதங்கத்தில் சி.கே. வாசுதேவனும், வயலின் சி.கே. விஜயராகவன், புல்லாங்குழலில் பதஞ்சலி, நிகழ்ச்சியை சிறப்பாக தொகுதி வழங்கினார் சரண்யா காயத்ரி.

பந்தநல்லூர் கலை பள்ளியின் இயக்குநர் டாக்டர் அர்ச்சனா நாராயணமூர்த்தி மற்றும் நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளியின் செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, முழு மனதுடனும் அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும், வளர்ந்து வரும் கலைஞராக நிருத்ருதியின் முயற்சியைப் பாராட்டினர்.

குமாரி நிருத்ருதி-யின் தாயார் திருமதி. மிருணாளினி கடந்த 20 ஆண்டுகளாக நடனம் பயிற்றுவித்து வருகிறார்.

மேலும் இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு இந்த பாரம்பரிய கலையை புகுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் Natyanrit Academy of Bharathanatyam என்ற நடனப்பள்ளியை நிறுவினார்.

நிருத்ருதி தனது 5 வயதில் ஆடிய காளிங்க நர்த்தனத்தை கலைமாமணி குரு ஸ்ரீமதி அனிதா குஹா அவர்கள் நேரில் கண்டு பாராட்டினார்.

30-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நடனமாடிய இவர் மேலும் பல சாதனைகள் மற்றும் விருதுகள் பெற வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *