தென்மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கியது சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி
சென்னை, டிசம்பர் 21, 2023: வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் 1000 பேருக்கு நிவாரண உதவிகளை சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வழங்கியது.
அரிசி, எண்ணெய், பருப்பு பிஸ்கட் உள்ளிட்ட உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் இயக்குனர் சபரி நாயர் ரிப்பன் மாளிகையில் வழங்கினார்.
இதுகுறித்து பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் சபரி நாயர் தெரிவிக்கையில், வரலாறு காணாத இந்த மழை பொழிவினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தங்களது உடமைகளையும், உறவினர்களையும் இழந்து வாடும் மக்களுக்கு தனது வருத்தங்களை தெரிவித்து கொண்டார்.
இத்தருணத்தில் அனைவரும் அவர்களுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுமார் 1000 பேருக்கு தேவையான உணவு பொருட்களை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி சார்பில் வழங்கி இருக்கிறோம்.
நிவாரண பொருட்கள் அனைத்தும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி சார்பில் சென்னை பெருநகர மாநகராட்சியிடம் ரிப்பன் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த மனிதநேய உதவிகளை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி செய்துள்ளது என தெரிவித்தார்.