புரோட்டினெக்ஸ் #NoChairDare – தசை வலிமை சவால் மூலம் புரதக் குறைபாட்டை வெளிச்சம் போடும் நாடு தழுவிய இயக்கம்
சென்னை: இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து பிராண்டான புரோட்டினெக்ஸ், இந்தியர்களில் அதிகரித்து வரும் புரதக் குறைபாடு மற்றும் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறையின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #NoChairDare என்ற நாடு தழுவிய தசை வலிமை இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் @protinexin வழியாக வால்-சிட் (Wall Sit) சவால் நடத்தப்படுகிறது. இதில் பெண்கள் சராசரியாக 27 வினாடிகள் மற்றும் ஆண்கள் 34 வினாடிகள் நிலைத்திருக்க வேண்டும் என்ற குறிகாட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் தசை வலிமையை சோதித்து, தினசரி ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை மேம்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இயக்கத்தை விரிவுபடுத்த 25-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் படைப்பாளிகள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களுடன் புரோட்டினெக்ஸ் இணைந்துள்ளது. இந்தியர்களின் தினசரி புரத உட்கொள்ளல் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், தசை வலிமை ஆரோக்கியத்தின் முக்கியக் குறிகாட்டியாக அமைகிறது என தெரிவிக்கப்படுகிறது.
டானோன் இந்தியா மார்க்கெட்டிங் இயக்குநர் பிரியங்கா வர்மா கூறுகையில், “ஊட்டச்சத்து விழிப்புணர்வை செயல்முறையாக்கி, மக்கள் ஆரோக்கியமான அன்றாட பழக்கங்களை உருவாக்க ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்” என்றார்.
#NoChairDare மூலம், நாடு முழுவதும் உள்ள மக்களை தங்கள் உடல் வலிமையை சோதித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி முன்னேற புரோட்டினெக்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

