மலேசியாவின் ராக்ஸ்டார் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டஸ் விருது சென்னை நடன பள்ளிக்கு வழங்கப்பட்டது
மலேசிய நாட்டினை சேர்ந்த ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் சார்பாக சென்னை பள்ளிக்கரணையில் இயங்கி வரும் நெக்ஸ்ட் மூவ் டான்ஸ் அகாடமி நிறுவனத்திற்கு ராக்ஸ்டார் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்டஸ் என்னும் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேற்கத்திய நடன அசைவுகளை இந்திய பாடல்களுக்கு ஏற்றவாறு நடன அமைப்பு செய்து சாதனை படைத்ததற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சென்னை பள்ளிக்கரணை நெக்ஸ்ட் மூவ் டான்ஸ் அகாடமியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் நிறுவன தலைவர் ராகவி பவனேஸ்வரி, இலங்கை அரசின் முன்னாள் ஆலோசகரும், எழுத்தாளருமான சதீஷ்குமார் சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருந்தினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடனப்பள்ளியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தினர். சிறுவர்களின் நடத்தை கண்டுகளித்த சிறப்பு விருந்தினர்கள் நடனம் ஆடியவர்களை வெகுவாக பாராட்டினார்.
தொடர்ந்து நடனத்தில் சாதனை படைத்ததற்கான விருதை எழுத்தாளர் சதீஷ்குமார் சிவலிங்கம் நடன பள்ளியின் நிறுவனர் மாஸ்டர் நவீனிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் சதீஷ்குமார் சிவலிங்கம் பேசுகையில்,
ஒவ்வொரு பாடல்களுக்கும் சிறப்பாக ஆடிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நடனம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக கூறினார். இலங்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் அங்குள்ள இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற கலைகளின் மூலம் தமிழையும், தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் தமிழை கற்றுக்கொள்ள அழைத்தால் யாரும் வருவதில்லை, நடனம் என்றால் கற்றுக்கொள்ள வரிசையில் நிற்கின்றனர். அவர்களுக்கு நடனத்தோடு சேர்த்தே தமிழும் கற்று கொடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நெக்ஸ்ட் மூவ் டான்ஸ் அகாடமியில் பயிலும் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பலர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை வீடியோ-வாக பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.