CINEMA

ஷாருக்கானின் டிபன் பாக்ஸில் இருப்பது என்ன? தெரிந்துகொள்ள நெட்டிசன்கள் ஆவல்!

ஷாருக்கானின் டிபன் பாக்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது? என்பதை அறிய இணைய உலகமே ஆர்வத்துடன் அல்லாடிக் கொண்டிருக்கிறது. தங்களின் அன்புக்குரிய சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பது எது என்பதை அறிய அவரது ரசிகர்களும், உணவுப் பிரியர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஷாருக்கின் டிபன் பாக்ஸ் பற்றிய அந்த மர்மத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம், இதோ வந்து விட்டது!

ஒரு சுவாரஸ்யமான ஸ்பாட்டில், பாலிவுட் நடிகர்கள் தாருக் ரெய்னா மற்றும் ஆதர்ஷ் கவுரவ் ஆகியோர், SRK இன் டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சிக்கும் [Instagram video] ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Taaruk Raina https://www.instagram.com/reel/C7OHlVqp65B/?igsh=MWFqNHNzcGJndHZnaA==

Adarsh Gourav- https://www.instagram.com/reel/C7OH5w2yE15/?igsh=cXFldWZtc2M1cjF4

அவர்களுடன், ஃபரா கான் குந்தர், நட்சத்திர சமையல் கலைஞர் சஞ்சோத் கீர், பிரபல நடன இயக்குனர் ஷேஜான் கான் மற்றும் பிரபல சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர் ஆர்யன் கட்டாரியா உள்ளிட்ட பிற செலிபிரிட்டிகளும் பங்கேற்று, கிங் கானின் டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது? என்ற பரபரப்பான கேள்வியை கேட்கின்ற இந்த வீடியோ மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

வீடியோவின் இறுதியில் ஷாருக்கானே நம் முன் தோன்றும் போது, தங்களின் அன்பான நட்சத்திரத்தின் டிபன் பாக்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது? என பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்து, அவர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட உடனேயே வைரலாகி, அட்டகாசமான அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் லைக், கமெண்ட், ஷேர்களை அள்ளித் தெளிக்கின்றனர். அதோடு, ஒவ்வொருவரும் SRK இன் லஞ்ச் பாக்ஸில் என்ன இருக்கிறது என்பதை யூகிக்கவும் முயற்சிக்கின்றனர்.

அது ஒரு சாலட்டாக இருக்குமா அல்லது ஸ்வீட், கேக், ஐஸ்கிரீமாக இருக்குமா அல்லது வீட்டில் சமைத்த உணவாக இருக்குமா? என ரசிகர்கள் பலவாறாக யூகித்து வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து வேடிக்கையில் இணைந்திடுங்கள்— SRK இன் டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஷாருக்கின் டிபன் பாக்ஸில் என்ன இருக்கிறது என்பதை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *