தமிழக சட்ட பல்கலை. பதிவாளருக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலை.யில் விருது
சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கௌரி ரமேஷிற்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக ஆராய்ச்சி மாநாட்டு மன்றம் சார்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் சர்வதேச கல்வி சிறப்பு விருதுகள் (SIPMS 2024) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளில் கல்வித்துறையில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதேபோல், இந்திய சட்ட கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கௌரி ரமேஷிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.
அரசு சட்ட கல்லூரிகளில் கடந்த 27 ஆண்டுகளாக பணியாற்றிவரும் முனைவர் கௌரி ரமேஷ், சென்னை அரசு சட்ட கல்லூரியில் முதல்வராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வரும் அவர், தமிழ்நாடு சட்ட பல்கலை.யில் முதல் பெண் பதிவாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.