நிகில் அத்வானி அவர்களின் விரைவில் வெளிவரவுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ தொடரில் சரோஜினி நாயுடு, லியாகத் அலி கான் மற்றும் VP மேனன் ஆகியோரின் கதாபாத்திரங்களில் RJ மலிஷ்கா, ராஜேஷ் குமார் மற்றும் KC சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்
சென்னை: Sony LIV மற்றும் Emmay Entertainment அவற்றின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ஃப்ரீடம் அட் மிட்நைட்” தொடரில் புதிய நடிகர்கள் சேர்ந்துள்ளதை அறிவித்துள்ளன. இந்த அரசியல் திரில்லரில் சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சாவும், லியாகத் அலி கானாக ராஜேஷ் குமாரும், V.P. மேனன்னாக KC.சங்கரும் நடிக்கின்றனர். சரோஜினி நாயுடு, வி.பி.மேனன் மற்றும் லியாகத் அலிகான் ஆகியோர் சுதந்திர காலத்தில் முக்கிய பங்குவகித்தனர். நாயுடு, ஒரு முக்கிய பெண் குரல், இந்தியாவின் விடுதலைக்காக வாதிட்டார் மற்றும் அவரது கவிதை மற்றும் செயல்பாட்டிற்காக புகழ்பெற்றார். மேனன், அரசியலமைப்பு ஆலோசகராக, சமஸ்தானங்களை சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். முகமது அலி ஜின்னாவின் நெருங்கிய கூட்டாளியான லியாகத், பிரிவினைப் பேச்சுவார்த்தையின் போது முக்கிய தலைவராக இருந்தார், ஆனால் பிரதமராக சோகமான முடிவை சந்தித்தார். ஒவ்வொருவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அரசியல் தளத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சரோஜினி நாயுடுவாக நடித்ததைப் பற்றி மலிஷ்கா அவர்கள், “ஃப்ரீடம் அட் மிட்நைட்டில் இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடுவை சித்தரிப்பதில் நான் உண்மையிலேயே மிகுந்த பெருமைகொள்கிறேன். அவர்களைப் பற்றி நான் படித்தது மற்றும் எங்கள் இயக்குனருடன் நான் நடத்திய விவாதங்கள் மட்டுமே எனது ஒரே குறிப்பு என்பதால் அவர்களைப் பற்றி நடிப்பது ஒரு சவாலும் எனக்கு மிகுந்த மரியாதையும் ஆகும். அவர் எந்த வரம்புகளும் இல்லாத இந்தியாவின் நவீன பெண்களின் உண்மையான பிரதிநிதி என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர் மற்றும் ஒரு சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல் அரசியலில் பெண்களுக்கு ஒரு தடம் பதித்தவர். நமது தேசத்தின் வரலாற்றில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திய காலகட்டத்தில் அவரது குணாதிசயத்தின் சிக்கல்களை ஆழமாகப் பார்ப்பதும், அவரது பயணத்தைப் புரிந்துகொள்வதும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இந்தத் தொடரின் ஒரு பகுதியாக இருப்பது, காலப்போக்கில் பின்னோக்கிச் செல்வது மற்றும் வரலாற்றை அதன் மிக அசலான வடிவத்தில் அனுபவிப்பது போன்றது” என்று கூறினார்.
‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ தொடரில் லியாகத் அலி கான் கதாபாத்திரத்திற்கு தயாரானது குறித்து, ராஜேஷ் ஷர்மா அவர்கள், “லியாகத் அலி கானின் கதாபாத்திரத்தில் நடித்தது எனது கேரியரில் ஒரு முக்கிய தருணம். அவரது வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் மற்றும் அரசியல் நிபுணத்துவம் பற்றிய முழுமையான ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வு மூலம், கானின் நுணுக்கமான ஆளுமையை திரையில் உண்மையாக சித்தரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். இந்த அரசியல் திரில்லர் கதையில் எனது நடிப்புப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருப்பதால், எனது ரசிகர்கள் மற்றும் சகாக்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
ஃப்ரீடம் அட் மிட்நைட், ஸ்டுடியோநெக்ஸ்ட் மற்றும் Sony LIV யுடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி மற்றும் மது போஜ்வானி) தயாரித்துள்ளது, நிகில் அத்வானி ஷோரன்னராகவும் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். கதையை அபிநந்தன் குப்தா, அத்விதியா கரேங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி ஷர்மா, ரேவந்தா சாராபாய் மற்றும் ஈதன் டெய்லர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஃப்ரீடம் அட் மிட்நைட் உடன் வரலாற்றை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அருகில் கண்டிடுங்கள், Sony LIV யில் விரைவில் பிரத்தியேகமாக பார்த்து மகிழுங்கள்!