டாடா பவர் இதுவரை இல்லாத அதிகபட்ச வரிக்கு பிந்தைய வருவாயாக ₹ 4,280 கோடியையும், 2024-ம் நிதியாண்டு வருவாயாக ₹ 61,542 கோடியையும் பெற்றிருக்கிறது!
2024-ம்நிதியாண்டுக்கான ஒருங்கிணைந்த EBITDA 26% வளர்ச்சியடைந்திருப்பதோடு, இதுவரை இல்லாத அளவாக ₹ 12,701 கோடியை எட்டியிருக்கிறது.
2024-ம் காலாண்டில் [Q4FY24] வரிக்கு பிந்தைய வருவாய் [PAT] 18% அதிகரித்து ₹ 1,109 கோடி ஆக உயர்ந்திருக்கிறது; இதன் மூலம் வரிக்கு பிந்தைய வருவாய் தொடர்ந்து 18-வது காலாண்டுகளாக வளர்ச்சியை கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான காலாண்டில் உள்ளது.
ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 2 ஈவுத்தொகையை [dividend] போர்ட் பரிந்துரைக்கிறது.
சென்னை, 10 மே, 2024: இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக முன்னணி வகிக்கும் டாடா பவர் [Tata Power, one of India’s largest integrated power company], மார்ச் 31, 2024-ல் முடிவடைந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வரிக்குப் பிந்தைய வருவாய் [PAT] ₹ 4,280 கோடியாக பதிவு செய்துள்ளது. 2024-ம் காலாண்டில் [Q4FY24] தொடர்ந்து 18-வது காலாண்டுகளாக வரிக்குப் பிந்தைய வருவாய் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் வரிக்குப் பிந்தைய வருவாய் ₹1,109 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் சந்தை மூலதனம் ₹1.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
2024-ம் நிதியாண்டில், டாடா பவர் நிறுவனம் தனது அதிகபட்ச வருவாய் மற்றும் EBITDA-வாக முறையே ₹61,542 கோடி மற்றும் ₹12,701 கோடியை எட்டியிருக்கிறது.ஜெனரேஷன், ட்ரான்ஸ்மிஷன் & டிஸ்ட்ரிபியூஷன் & ரினவபிள்ஸ் ஆகியவற்றின் முக்கிய வணிகங்களின் மூலமான பங்குகளின் வலுவான வளர்ச்சியுடன் இது சாத்தியமாகி இருக்கிறது. இதன் மூலம் FY24 PAT-க்கு 74% பங்களிப்பை கொடுத்திருக்கிறது. இது FY23 உடன் ஒப்பிடும் போது 44% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஒரு ஈக்விட்டி பங்கிற்கு டிவிடெண்ட்டாக ₹2-யை பரிந்துரைத்துள்ளது.
டாடா பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரவீர் சின்ஹா [Dr. Praveer Sinha, CEO and Managing Director, Tata Power] கூறுகையில், “வரிக்கு பிந்தைய வருவாயில் மீண்டுமொரு அருமையான காலாண்டில் எங்கள் நிறுவனம் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2024-ம் காலாண்டில் வருவாய்க்கு பிந்தைய வருவாயில் வளர்ச்சி கண்டிருப்பதன் மூலம், தொடர்ந்து 18-வது காலாண்டாக PAT வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். ஜெனரேஷன், ட்ரான்ஸ்மிஷன் & டிஸ்ட்ரிபியூஷன், ரினவபிள் ஆகிய எங்களது அனைத்து முக்கிய வணிகங்களின் செயல்பாடு மற்றும் நிதி செயல்திறன் மிக வலுவாக இருப்பதோடு, வளர்ச்சி பாதையில் உள்ளது’’ என்றார்.
இன்று, டாடா பவர் எரிசக்தி ஆற்றல் துறையில் பரவலாக கொண்டிருக்கும் தொடர் செயல்பாடுகளின்ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் இந்தியாவின் ஆற்றல் பகிர்மானத்தில் முன்னணியில் நிற்கிறது. எங்களின் க்ளீன் எனர்ஜி போர்ட்ஃபோலியோ 2027-ம் நிதியாண்டுக்குள் 15 GW-ஐ தொடும், மேலும் எங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள சூரிய, காற்று மற்றும் பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ ஸ்டோரேஜ் திட்டங்களின் [solar, wind and Pumped Hydro Storage Projects] ஒருங்கிணைப்பின் மூலம் எங்களுடைய நுகர்வோருக்கு 24 மணிநேர புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
ஒடிசா டிஸ்காம்கள் [Odisha Discoms], பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு செயல்பாட்டு மாதிரியின் வெற்றியை நிரூபித்துள்ளன. மேலும் மூன்று ஆண்டுகளிலான குறுகிய காலத்திற்குள் லாபம் ஈட்டியுள்ளன. இவை தனியார்மயமாக்கலுக்குத் தயாரானதும், புதிய மின் விநியோக வாய்ப்புகளைப் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
2GW-க்கும் அதிகமான போர்ட்ஃபோலியோவுடன், ரூஃப் டாப் சோலார் வணிகம் விரைவான வளர்ச்சி வேகத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், குறிப்பாக ஒரு கோடி குடும்பங்களுக்கு ஒளியூட்டுவதை நோக்கமாகக் கொண்ட ‘பிஎம் சூர்யா கர் யோஜனா [PM Surya Ghar Yojana] திட்டத்தின் கீழ், அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாரான நிலையில் இருக்கிறோம்.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மிகவும் விருப்பமான மற்றும் நம்பகமான பசுமை ஆற்றல் தீர்வுகள் வழங்கும் நிறுவனமாகவும், அவர்களின் விருப்பத்திற்குரிய பயன்பாட்டு தேர்வாகவும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்.”